$
How To Get Rid Of Body Smell: உடல் துர்நாற்றம், நாம் பலரும் எதிர்கொள்ளும் இரு பிரச்னையாக திகழ்கிறது. இது நம் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்களின் காரணமாக ஏற்படலாம். அல்லது அதிகபடியான வியற்வை கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த உடல் துர்நாற்றம், நம்மை மன ரீதியாக சேதப்படுத்துகிறது. இதில் இருந்து விடுபட, பர்ஃபியூம், டியோ போன்றவற்றை முயற்சி செய்கிறோம். இருப்பினும் அதையும் தாண்டி, துர்நாற்றமானது வெளிப்படுகிறது. இதனால் நாம் பொது இடத்தில் செல்லும் போது சங்கடமாக உணர்கிறோம். இது மன உளைச்சளுக்கு நம்மை ஆளாக்குகிறது. இதில் இருந்து விடுபட சில குறிப்புகள் இங்கே.
உடல் துர்நாற்றத்தை குறைக்க எளிய வழிகள் (Tips to Reduce Body Smell):
நம் உடலில் இருந்து நீர் வியர்வையின் மூலம் அதிகம் வெளியாகும் போது, உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் வாய் மற்றும் உடலில் சில இடங்களில் இருந்து துர்நாற்றம் வீசும். இதனை தடுக்க நாம் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவு பொருட்கள் கூட உங்கள் உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவர காரணமாக இருக்கலாம். ஆகையால் நீங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் நோய்களை விரட்ட… இதை பாலோவ் பண்ணுங்க!
உங்களை தன்னம்பிக்கையாக உணர வைக்கும் வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள். குறிப்பாக அது 24 மணி நேரம் நிலைத்து நிற்கிறதா என்பதை டெஸ்ட் செய்து பாருங்கள். மேலும் இதனால் உங்களுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் தோலுக்கு ஏற்றவாறு சோப்பு மற்றும் பவுடர்களை பயன்படுத்துங்கள். இது உங்களை முழு நேரமும் வாசனையுடன் வைத்துக்கொள்கிறதா என்பதை டெஸ்ட் செய்து பார்க்கவும்.
உங்கள் தலையில் இருந்து வரும் நாற்றத்தை தவிர்க்க, நல்ல வாசனை கொண்ட ஷாம்பு, கண்டீஷ்னர் மற்றும் எண்ணெயை பயன்படுத்தவும். இது உங்கள் முடியை பாதிக்காமல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் ஏற்படும் நாற்றத்திற்கு ஆடைகளும் காரணமாக இருக்கலாம். நீங்கள் அணியும் துணிகளை நன்கு துவைத்து, வெயிலில் காயவைத்து பராமரிக்கவும். இதனை பராமரிக்க நல்ல வாசனை கொண்ட பொருட்களை பயன்படுத்தவும்.
நினைவில் கொள்ளுங்கள்
உங்கள் உடலில் உள்ள துர்நாற்றத்தை போக்க நீங்கள் எந்த முயற்சிகளை எடுக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக நீங்கள் தோல் மற்றும் முடி சார்ந்த பொருட்களை உபயோகிக்கும் முன் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்கள் தோல் நிலையை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு லோஷன் அல்லது க்ரீம்களை பரிந்துரைக்க முடியும்.
Image Source: Freepik