Liver Detox: கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டுமா? - உடனே இந்த மேஜிக் ட்ரிங்க்ஸை ட்ரை பண்ணிப்பாருங்க!

  • SHARE
  • FOLLOW
Liver Detox: கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டுமா? - உடனே இந்த மேஜிக் ட்ரிங்க்ஸை ட்ரை பண்ணிப்பாருங்க!


Liver Health: நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரல் ஒன்றாகும். ஏனெனில் இது உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது, கார்ப்போஹைட்ரேட்டை உடைத்து குளுக்கோஸாக மாற்றுவது, ஊட்டச்சத்துக்களை சேகரிப்பது என பல்வேறு வகையான வேலைகளை செய்கிறது.

ஆனால் அதிகப்படியான உணவு உண்பது, நொறுக்குத் தீனிகள், மன அழுத்தம், பதட்டம், மாசுபாடு, வேலைப்பளு, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பல காரணங்களால் நமது கல்லீரல் பாதிப்படைகிறது. இதன் விளைவாக, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் பணி தடைபடுகிறது.

நம் உணவில் சில சாறுகளை சேர்த்துக் கொண்டால் கல்லீரல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்..

பச்சை காய்கறிகள்:


how-to-detox-your-liver-naturally

பச்சை காய்கறிகளை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுகளை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. பச்சை காய்கறிகளை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பச்சைக் காய்கறிகளை ஜூஸாக எடுத்துக்கொண்டால் அது எளிதில் ஜீரணமாகி எளிதில் டீடாக்ஸ் செய்துவிடும்.

கேரட் ஜூஸ்:


how-to-detox-your-liver-naturally

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கேரட் ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் சாறு கல்லீரலில் பித்தம் மற்றும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. கேரட் சாற்றில் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. கல்லீரலையும் பெரிய குடலையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

பீட்ருட் ஜூஸ்:


how-to-detox-your-liver-naturally

பீட்ரூட்டில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பீட்ரூட் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது ஒரு அருமருந்தாகும். அதாவது பீட்ருட் ஜூஸை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர் மூலம் இருந்து வெளியேற்றப்பட்டு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கிரீன் டீ:

உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும். உடலில் உள்ள கொழுப்பை எரிக்க கிரீன் டீ மிகவும் உதவுகிறது. இது கல்லீரலின் சுமையை ஓரளவு குறைக்கிறது. சர்க்கரை இல்லாத கிரீன் டீ சாப்பிடுவது கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.

திராட்சை:


how-to-detox-your-liver-naturally

தி வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியின் ஆய்வில், திராட்சையில் உள்ள இரண்டு முக்கிய ஆக்ஸிஜனேற்றிகளான நரிங்கின் மற்றும் நரிங்கெனின், கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் செல்களைப் பாதுகாக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. கொழுப்பை எரிக்கும் என்சைம்களை அதிகரிக்கிறது.

எலுமிச்சை சாறு:


how-to-detox-your-liver-naturally

இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர் கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற சிறந்த தீர்வாகும். இது மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது உடல் எடையை குறைப்பு, வாயு தொல்லை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது போன்றவற்றை செய்கிறது.

Read Next

கை கால் நடுக்கத்திற்கு இது தான் காரணம்!

Disclaimer

குறிச்சொற்கள்