குழந்தையின் வளர்ச்சியில் தாய்ப்பால் சிறந்த பங்கு வகிக்கிறது. பால் கொடுக்கும் போது குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேரகவும், அவர்களது முகம் முலைக்காம்புக்கு எதிராகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லை என்றால், பால் கட்டுதல் ஏற்படும். மேலும் பால் சுரப்பதும் குறைந்து விடும். இது போன்ற நிலைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகளுக்கு சரியான முறையில் பால் கொடுப்பது அவசியம். இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆரம்பகாலத்தில் கடினமாக இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் முறை:
பொதுவாக குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும் போது, அதிகபடியான பால் சுரக்கும். மேலும் தாய்ப்பால் கொடுப்பதில் நான்கு முறைகள் உள்ளன. பக்கவாட்டில் வைத்து பால் கொடுப்பது, தொட்டில் நிலையில் பால் கொடுப்பது, குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலை மற்றும் இடைப்பட்ட நிலை என பிரிக்கப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலை என்பது, குழந்தையின் உடலை தாயில் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்து பால் கொடுப்பது ஆகும். இதே போல் தான் தொட்டில் நிலையும் இருக்கும். அதாவது குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலையோடு, குழந்தையில் தலையை உங்கள் கையால் குறுக்காக பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை ஆகும். இதே போல், இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுத்து பாலூட்டும் நிலை இடைப்பட்ட நிலை ஆகும்.
பக்கவாட்டில் வைத்து பால் கொடுக்கும் நிலை என்பது, தாயும் குழந்தையும் படுத்துக் கொண்டு பாலூட்டும் நிலை ஆகும். ஆனால், இது குழந்தை பால் குடிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தைக்கு கழுத்து வலி கூட ஏற்படலாம். மேலும் படுத்து கொண்டு பால் குடிப்பதால் குழந்தைக்கு மூச்சுக்குழலில் பால் செல்ல வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த நிலையை அதிகம் பயன்படுத்த வேண்டாம். மேலும் எப்போது உட்கார்ந்த நிலையில் பால் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
Image Source: Freepik