Smartphone Affect Relationships: உறவில் விரிசலை உண்டாக்கும் ஸ்மார்ட்போன். எப்படி பாதுகாத்துக் கொள்வது?

  • SHARE
  • FOLLOW
Smartphone Affect Relationships: உறவில் விரிசலை உண்டாக்கும் ஸ்மார்ட்போன். எப்படி பாதுகாத்துக் கொள்வது?

இப்போதைய சூழ்நிலையில், ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இது மட்டுமின்றி தினமும் ஒன்றாக அமர்ந்து, சமூக வலைதள குழுக்களில் உரையாடல்களும் நடக்கும். இது உறவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு உறவுகளுக்கிடையே எவ்வாறு விரிசலை ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும், இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Important Things Before Marriage: திருமணத்துக்கு முன் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் உறவில் ஏற்படும் விளைவுகள்

ஸ்மார்ட்போன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருப்பினும், இதை தவறாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். அதிக நேரம் மொபைல் போன்களை பயன்படுத்துவர்களின் உறவில் நேரடி தாக்கம் ஏற்படும். இது எந்தெந்த வகைகளில் உறவில் விரிசலைத் தருகிறது என்பதைக் காண்போம்.

உறவிலிருந்து விலகி இருப்பது

நாள் முழுவதும் ஸ்மார்போன்களில் செய்திகள், பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களைப் பார்ப்பது மற்றும் படிப்பது போன்றவற்றால், அவர்களின் கவனம் சில உண்மையான மற்றும் கவனிக்க வேண்டியவற்றிலிருந்து திசைதிருப்பத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், மக்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது ஆர்வம் காட்டமல் இருப்பர்.

இந்நிலையைத் தவிர்க்க, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கென தனியாக காலக்கெடு ஒன்றை அமைத்து, உங்களை சுற்றியுள்ளவர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை நேரடியாக பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Marrying Best Friend: உங்க நட்பையே திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

உறவிடமிருந்து திசை திருப்புதல்

அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் விஷயங்கள் மீதான கவனம் வெகுவாகக் குறைகிறது. பலரும் ஒரே இடத்தில் இருந்து முக்கிய விவாதம் நடந்து கொண்டிருப்பினும், திடீரென வரும் மொபைலின் ஒரு பிங் சத்தம், அது போனின் மீது கவனத்தை திசை திருப்புகிறது. மெய்நிகர் உலகத்தின் மீதான கவனம், நிஜ உலகில் உள்ளவர்களிடம் சரியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையை உண்டாக்குகிறது. இதன் நேரடி விளைவு உறவுகளில் தூரத்தை அதிகரிக்கும்.

இந்த பிரச்சனையைத் தவிர்க்க, முக்கிய உரையாடல்களின் போது, வீட்டில் இருக்கும் போது அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் போது அல்லது தனிப்பட்ட உரையாடல்களின் போது தொலைபேசியை பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட தொலைபேசி தடையாக இருக்கக் கூடாது.

நம்பிக்கை இழப்பு ஏற்படுவது

ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் அதிக நபர்களுடன் எளிதாக இணைக்க முடியும். ஆனால், இங்கு நம்பிக்கை குறைந்த ஆபத்து அதிகம் உள்ளது. சமூக ஊடகங்களில் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். ஆனால், அந்த நபர்கள் மீதான உங்கள் நம்பிக்கை அல்லது அவர்கள் மீதான நம்பிக்கை உங்களுடன் எப்போதும் இருப்பவர்களை விட குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில், நம்பிக்கை இழப்பிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போன் அல்லது சமூக ஊடகங்களில் உருவாக்கும் நண்பர்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கும் நேரத்தைச் சமநிலைப்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Marriage Life Problems Solution: உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனையா? இப்படி செய்யுங்க

உறவுகளிடம் தூரம் அதிகரித்தல்

உலகின் எந்த மூலையிலும் உள்ள நபருடன் இணைவதற்கான வாய்ப்பை ஸ்மார்ட்போன் வழங்குகிறது. ஆனால், இதன் அதிகப்படியான பயன்பாடு, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து உங்களை தூரமாக வைக்கிறது.

இவற்றைத் தவிர்க்க, ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும். மேலும், முடிந்தவரை மக்களுடன் நேரடியாக இணைக்க முயற்சிக்கவும். இதைச் செய்வதன் மூலம் இரண்டையும் நிர்வகிக்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் அதிகளவு பயன்பாடு, உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தலாம். செல்போன் பயன்பாடு இருப்பினும், உறவுகள் மிகவும் முக்கியமானவை மற்றும் அர்த்தமுள்ளவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உறவுகள் ஏற்படும் தூரம் அல்லது பதற்றம் போன்றவை வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Friendship After Marriage: திருமணத்திற்குப் பின் நட்பைப் பேணிக் காப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Marrying Best Friend: உங்க நட்பையே திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

Disclaimer