Marrying Best Friend: உங்க நட்பையே திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Marrying Best Friend: உங்க நட்பையே திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?


Benefits Of Marrying Best Friend: அனைவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று மற்றும் முக்கிய திருப்பாக அமைவது திருமணம் ஆகும். ஒருவருடன் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பகிர்வது, ஒரே வீட்டில் வாழ்வது என இன்னும் பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கு நீங்கள் எடுக்கப் போகும் முடிவே காரணமாக அமையும். இந்த இடத்தில் உங்களுடைய சிறந்த நண்பர்கள் இருந்தால், திருமண வாழ்க்கை எப்படி வெற்றிகரமாக இருக்கும். என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.

நண்பரை திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் சிறந்த நண்பரையேத் திருமணம் செய்து கொள்வதன் மூலம், வாழ்க்கையை எவ்வாறு திருப்திகரமாக செயல்படுத்த முடியும் மற்றும் எந்தவிதமான நன்மைகளைப் பெறலாம் உள்ளிட்டவை குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Marriage Life Problems Solution: உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனையா? இப்படி செய்யுங்க

தனித்துவத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம்

நண்பர்களைத் திருமணம் செய்வதன் மூலம், தோழர்களாக இருந்த காலத்தில் இருப்பது போன்றே, திருமணத்திற்கு பின்னும் இருக்கலாம். உங்கள் சிறந்த நண்பர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பர் என்பதையும் அறிந்திருப்பீர்கள். எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் தெரியும். மேலும், நீங்கள் எதையும் மற்றும் விரும்பிய அனைத்தையும் செய்யலாம்.

நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறை

சிறந்த நண்பரைத் திருமணம் செய்வதன் மூலம், நிபந்தனையற்ற அன்பு மற்றும் முடிவில்லாத கவனிப்பு சிறப்பாகக் கிடைக்கும். நீங்கள் எவ்வளவு சண்டையிட்டாலும், என்ன செய்தாலும், உங்கள் சிறந்த நண்பர் சிறிது நேரம் கழுத்து, உங்களிடம் வருவார். ஏனெனில், இருவரும் நீண்ட நேரம் விலகி இருக்க முடியாது. அதே சமயம், அவர்கள் உங்கள் முன் எந்த நிபந்தனையையும் வைக்க மாட்டார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Relationship Tips: ஆரோக்கியமான உறவை பராமரிப்பதற்கான சிறந்த வழிகள்

ஒருவரையொருவர் நன்கு அறிதல்

சிறந்த நண்பர், உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை விட, உங்களைப் பற்றி அதிகம் அறிந்தவராகவே இருப்பர். சிறந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்வர். அதன் படி, விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் முதல் வாழ்க்கையின் அம்சங்கள் வரை அனைத்தும் குறித்து, ஒருவருக்கொருவர் முன்னதாகவே தெரிந்திருப்பர். எனவே, மறைக்கப்பட்ட விஷயங்களும், ஏமாற்றங்களும் இருக்காது. ஒருவரையொருவர் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டியதில்லை. அதே சமயம், நன்கு அறிமுகமில்லாத ஒருவரை நீங்கள், திருமணம் செய்து கொண்டால் இவை நடக்கும்.

ஒருவருக்கொருவர் ஆதரிப்பது

உங்கள் மனதில் தோன்றும் சில யோசனைகள் மற்றும் கனவுகள் அல்லது சாகசங்களை நீங்கள் செய்யும் போது அதை முதலில் ஆதரிக்கும் நபராக இருப்பவர் உங்கள் சிறந்த நண்பரே. மேலும் இந்த சாகசங்களை ஒன்றாகச் செய்வதில் கைகோர்ப்பர். ஒன்றாக பயணங்களைத் திட்டமிடுவதில் ஒற்றுமை இருக்கும். ஏனெனில் ஒருவருக்கொருவர் விருப்பங்களை பகிர்ந்து கொள்வர்.

முதுமை வரை பயணித்தல்

உங்கள் சிறந்த நண்பரைத் திருமணம் செய்து கொள்வது, நீங்கள் விரும்பும் நபருடன் வயதாகி வருகிறது. இந்த காலத்தில் சிறந்த விஷயங்கள் அதாவது நீண்ட கால அற்புத நினைவுகளை பகிர்ந்து கொள்வது வாழ்க்கையின் சிறந்த நபருடனான தருணங்கள் சிறப்பாக இருக்கும்.

ஒரே ஆர்வங்கள் மற்றும் இலக்குகளைப் பகிர்தல்

உங்களுடைய சிறந்த நண்பருக்கும், உங்களுக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக இருக்கலாம். அதாவது ஆர்வங்கள், இலக்குகள் போன்றவை. இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேட்கும் போது, அவர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்ததை புரிந்து கொள்ளாவிட்டாலும், அதை மதிப்பார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: Friendship After Marriage: திருமணத்திற்குப் பின் நட்பைப் பேணிக் காப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Marriage Life Problems Solution: உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனையா? இப்படி செய்யுங்க

Disclaimer