Doctor Verified

Menstruation Symptoms: மாதவிடாய் அறிகுறிகள் வயதுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகின்றன

  • SHARE
  • FOLLOW
Menstruation Symptoms: மாதவிடாய் அறிகுறிகள் வயதுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகின்றன


வயதுக்கு ஏற்ப மாதவிடாய் அறிகுறிகள் எவ்வாறு மாறுபடுகின்றன

டாக்டர் குப்தாவின் கூற்றுப்படி, “வயது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாதவிடாய் அறிகுறிகள் ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது.” இதில் குறிப்பாக ஹார்மோன் அளவு மாறுவதால் மாதவிடாய் அறிகுறிகள் மாறுபடுகிறது. இது மாதவிடாய் முதுமையின் வெளிப்படையான அறிகுறியாகும். ஒரு சிலருக்கு முதுமைப் பருவத்தில் மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும். பல ஆண்டுகளாக தொடரும் மாதவிடாயின் அறிகுறிகள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்த விரிவான தகவ்லை டாக்டர் குப்தா கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

20 வயது பெண்களுக்கு மாதவிடாய் அறிகுறிகள்

20 வயது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் அறிகுறிகள் குறித்து காணலாம்.

லேசானது முதல் மிதமான தசைப்பிடிப்பு

மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்புகள் ஏற்படும். ஆனால், டீன் ஏஜ் வயதினவர்களுடன் ஒப்பிடும் போது 20 வயது பெண்களுக்கு ஏற்படும் தசைப்பிடிப்பு லேசானதாக இருக்கும். இந்த அசௌகரியத்தை தணிக்க வலிநிவாரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சீரான ஓட்டம்

மாதவிடாய் இரத்தப்போக்கு சீராகவும், மிதமானதாகவும் இருக்கும். இவை சராசரியாக 3 முதல் 5 நாள்களுக்கு இடையில் நீடிக்கும்.

வழக்கமான மாதவிடாய் சுழற்சி

20 வயது பெண்களுக்கு கணிக்கக்கூடிய சுழற்சி நீளம், சீரான இரத்தப்போக்கு உள்ளிட்டவை வழக்கமான மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பதாக அமைகின்றன.

ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள்

ஹார்மோன் அளவுகள் குறிப்பாக, புரொஜஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு இந்த கால கட்டத்தில் சமநிலையில் இருக்கும். இதன் விளைவாக குறைவான, கடுமையான மனநிலை மாற்றங்கள் அல்லது உணர்ச்சி ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?

30 வயது பெண்களுக்கு மாதவிடாய் அறிகுறிகள்

30 வயதுகளில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி அறிகுறிகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் காணலாம்.

கனமான அல்லது இலகுவான ஓட்டம்

இந்த காலகட்டத்தில் மாதவிடாய் ஓட்டம் மாறுபடலாம். சில நபர்களுக்கு அதிக இரத்தப்போக்கும், மற்றவர்கள் லேசான இரத்தப்போக்கையும் அனுபவிக்கிறார்கள்.

சுழற்சி முறை மாற்றங்கள்

இந்த காலகட்டத்தில் சில தனிபர்கள் சுழற்சி முறையில் சிறிய மாற்றங்களை அனுபவிப்பர். அவ்வப்போது குறுகிய அல்லது நீண்ட சுழற்சிக் காலத்தை அனுபவிப்பர். இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.

வலிமிகுந்த காலகட்டத்தில் அதிகரிப்பு

இந்த 30 வயது காலகட்டத்தில் சில பெண்களுக்கு மிகத் தீவிரமாகவும் அதிக வலியுடனும் மாதவிடாய் ஏற்படலாம். வலுவான வலி நிவாரண நடவடிக்கைகள் மூலம் தணிக்கலாம்.

தீவிரமடைந்த PMS அறிகுறிகள்

PMS அல்லது மாதவிடாய் முன் நோய்க்குறி வீக்கம், மார்பக மென்மை, மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?

40 வயது பெண்களுக்கு மாதவிடாய் அறிகுறிகள்

மாதவிடாய் சுழற்சி அறிகுறிகள் 40 வயதானவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.

ஒழுங்கற்ற சுழற்சிகள்

பெரிமெனோபாஸ், மெனோபாஸ் வரை செல்லும் இடைநிலைக்கட்டம் இந்த 40 களில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் நிகழும். நீண்ட அல்லது குறுகிய சுழற்சிகள், தவறிய மாதவிடாய்கள் மற்றும் கணிக்க முடியாத இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும்.

ஓட்டத்தில் மாற்றங்கள்

மாதவிடாய் இரத்தப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். சில நபர்கள் கனமான அல்லது அதிக நீடித்த இரத்தப்போக்கை அனுபவிக்கின்றனர். மற்றவர்களுக்கு குறுகிய காலம் அல்லது லேசான ஓட்டம் இருக்கலாம்.

அதிக மாதவிடாய் வலி

சிலருக்கு மாதவிடாய் பிடிப்புகள் பெரிமெனோபாஸின் போது தீவிரமாக இருக்கும். இந்த பெரிமெனோபாஸின் மற்ற அறிகுறிகளாக இரவில் வியர்த்தல், லிபிடோ மாற்றங்கள் போன்றவை அடங்கும்.

மோசமாகும் PMS அறிகுறிகள்

இந்த பெரிமெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், PMS அறிகுறிகளைத் தீவிரமடையும். இந்த கால கட்டத்தில் மனச்சோர்வு, வீக்கம் போன்ற அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup: மென்சஸ் கப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரிஞ்சிகிட்டு பயன்படுத்தலாமே!

Image Source: Freepik

Read Next

Pregnancy Walking Benefits: கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Disclaimer

குறிச்சொற்கள்