Fatty Liver Effects: கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Fatty Liver Effects: கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா?


இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள யசோதா ஹாஸ்பிடல்ஸ், TAVR (Percutaneous Trans Aortic Valve Replacement) நிபுணர், மூத்த ஆலோசகர், இருதயநோய் நிபுணர் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் V ராஜசேகர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது இதய நோய் பாதிப்பையும் ஏற்படுத்தும். இந்த இரண்டு வேறுபட்ட உறுப்புகளுக்கு இடையே உள்ள சிக்கலான தொடர்பு உள்ளது. கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய இரண்டும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இருதய நோய் பிரச்சனைக்கு வழிவகுக்கும்

கொழுப்பு கல்லீரல் பல்வேறு வழிமுறைகள் மூலம் இதய நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கும். இதுகுறித்து டாக்டர் ராஜசேகர் கூறுகையில், கல்லீரலில் கொழுப்பு படிவதால், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அழற்சி இரசாயனங்கள் வெளியாகி உடல் முழுவதும் வீக்கத்தை ஊக்குவிக்கும். இது தமனிகளில் பிளேக் உருவாக்கம், இறுதியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.

இதய நோய் அபாயம்

கல்லீரலில் கொழுப்பு படியும் அதே அளவு தாக்கம் இதயத்திலும் கொழுப்பு படிகிறது. இரண்டும் சமமாக தாக்கத்தை சந்திக்கிறது. கொழுப்பு கல்லீரல் சிக்கலானது இன்சுலின் எதிர்ப்பு வளர்சிதை மாற்ற நோய்க்கு வழிவகுக்கும், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் வயிற்று உடல் பருமன் உள்ளிட்ட நிலைமைகளை சந்திக்க வைக்கும். இவை அனைத்தும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

கொழுப்பு கல்லீரலின் பிற சிக்கல்கள்

கொழுப்பு கல்லீரலின் சிக்கல்கள் இதய நோய்க்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என டாக்டர் ராஜசேகர் கூறினார். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் எக்ஸ்பெரிமென்டல் ஹெபடாலஜி வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று பெரியவர்களும் அல்லது குழந்தைகளில் ஒருவரும் NAFLD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இது கல்லீரல் வீக்கத்தால் வகைப்படுத்தப்படும் மிகவும் கடுமையான வடிவமாகும். காலப்போக்கில், இந்த வீக்கம் ஃபைப்ரோஸிஸ் அல்லது வடு திசுக்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.

முக்கிய அங்கமாக இருக்கும் கல்லீரல்

உடலில் முக்கியமாக பாகமாக கல்லீரல் இருக்கிறது. உடலின் உள்செயல்பாட்டில் சுமார் 500 வேலைகளை கல்லீரல் தான் செய்கிறது. குறிப்பாக உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலையாக கல்லீரல் இருக்கிறது. உடலுக்கு எது தீமை, நன்மை என்பது கண்டறியும் பண்பு கல்லீரலுக்கு தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு எந்த பாகத்திற்கு எவை தேவை என்பதை பகுத்து பிரித்து அனைத்து பாகத்திற்கும் வழங்கும். இந்த முக்கிய பாகமான கல்லீரலை காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனே மருத்துவரை அணுகவும்

கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் ஆகிய இரண்டுமே தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இதுபோன்ற நோய் அபாயத்தை தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். ஏதேனும் தீவிரத் தாக்கத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Brain Tumor Symptoms: மூளைக்கட்டி வகைகள், அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள்

Disclaimer

குறிச்சொற்கள்