Obesity and Cancer: உடல் பருமனால் புற்றுநோய் உண்டாகுமாம்! ஆய்வு கூறிய அதிர்ச்சித் தகவல்

  • SHARE
  • FOLLOW
Obesity and Cancer: உடல் பருமனால் புற்றுநோய் உண்டாகுமாம்! ஆய்வு கூறிய அதிர்ச்சித் தகவல்

Why Does Obesity Cause Cancer: இன்று பலரும் மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். ஆனால், இந்த உடல் பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். எச்சரிக்கும் விதமாக, சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், அதிக எடை பெருக்கத்துடன் தொடர்புடைய புற்றுநோய் எண்ணிக்கைக் கண்டறியப்பட்டுள்ளது.


முக்கியமான குறிப்புகள்:-


உடல் பருமன் காரணமாக புற்றுநோயின் அபாயம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. நான்கு தசாப்தங்களாக, 4.1 மில்லியன் பங்கேற்பாளர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்கள் தற்போது 10 பேரில் 4 பேருக்கு வரலம் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், உடல் பருமனால் 30 வகையான புற்றுநோய்கள் ஆய்வு தொடர்புபடுத்தியுள்ளது. உடல் பருமனால் 13 வகையான மிகவும் அபாயகரமான நோய்களுக்கு எதிராக தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை 40% அதிகரிக்குமாம்! எப்படி தெரியுமா?

உடல் பருமன் எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் குறைவான ஆரோக்கியத்துடனான உணவு முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன் மூலம் மக்கள் தங்களது உணவுமுறையில் குறைவான கவனமே செலுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

பாரம்பரிய மருத்துவ செலவுகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சனையைத் தருகிறது என்பதால், உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை தேசிய பொது சுகாதார அவசரநிலையாக மாற அச்சுறுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்திய சுகாதார அதிகாரிகளும் தினசரி உணவில் ஆரோக்கியமான உணவு சேர்க்கையைக் குறித்து ஆலோசனையை வெளியிடுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Mammography: மேமோகிராம் என்றால் என்ன.? எதற்காக இது எடுக்கப்படுகிறது.?

உடல் பருமனும், புற்றுநோயும்

ஸ்வீடனின் மால்மோவில் உள்ள லண்ட் பல்கலைக்கழகம், நான்கு தசாப்தங்களாக 4.1 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களைக் கொண்டு எடை மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் 122 வகை மற்றும் நோயின் துணை வகைகளை ஆய்வு செய்தனர். உடல் பருமனுடன் இணைப்புடனான 32 வகையான புற்றுநோய்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதில் புதிதாக சிறுகுடல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் புற்றுநோய்கள், வீரியம் மிக்க மெலனோமா, இரைப்பை கட்டிகள், பிட்யூட்டரி சுரப்பிகளின் புற்றுநோய்கள், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் வகைகள், மற்றும் ஆண்குறி புற்றுநோய் போன்றவை முதல்முறையாக உடல்பருமனுடன் தொடர்பான 19 சாத்தியமான புற்றுநோய்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிஎம்ஐ-ல் ஆரோக்கியமான எடை கொண்ட ஒருவருக்கு எடை அதிகரிக்கும் போது அதற்குச் சமமான சில புற்றுநோய்கள் பெண்களில் 13%-ம், ஆண்களில் 24%-ம் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உணவுமுறையைச் சரியாக கையாள்வதன் மூலமே உடல் பருமனை குறைக்க முடியும். எனவே உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: குண்டா இருந்தா இரத்த புற்றுநோய் வருமா.? ஆய்வுகள் கூறுவது என்ன.?

Image Source: Freepik

Read Next

அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை 40% அதிகரிக்குமாம்! எப்படி தெரியுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்