Sat Sep 12, 2026 | 01:48 AM IST

Obesity and Cancer: மக்களே உஷார்.. ரொம்ப குண்டா இருப்பவர்களுக்கு ரத்த புற்றுநோய் வருமாம்!

What is the main cause of blood cancer: தற்போது அதீத உடல் பருமன் என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. ஆனால், உடல் பருமன் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால், நீரிழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பிளட் அட்வான்ஸ் (Blood Advances) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், உடல் பருமன் இரத்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. Monoclonal gammopathy of undetermined significance (MGUS), பிரச்சனை உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகரிக்கலாம். இது ஒரு தீவிரமான நிலை, புறக்கணிப்பது உடலில் வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Cancer Treatment: சிறுநீரகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்.

70 சதவீதம் வரை ஆபத்து அதிகரிக்கும்

ஆய்வு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 70 சதவீதம் அதிகரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 2628 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் மைலோமாவின் ஆபத்து உடல் பருமன் உள்ளவர்களில் 73 சதவீதம் வரை இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில், சாதாரண எடை கொண்டவர்களில் இந்த ஆபத்து பருமனானவர்களை விட மிகவும் குறைவாக இருந்தது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஜாகிங் அல்லது 45 முதல் 60 நிமிடங்கள் ஓடுவது இந்த புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை வெகுவாக குறைக்கும். பல நேரங்களில் மோசமான வாழ்க்கை முறையும் இந்த நோய்க்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Skin Cancer Prevention: தோல் புற்றுநோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.

மல்டிபிள் மைலோமா என்றால் என்ன?

உண்மையில், மல்டிபிள் மைலோமா என்பது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும். இது வெள்ளை இரத்த அணுக்களில் உருவாகிறது. இந்த புற்றுநோய் ஏற்படும் போது, ​​புற்றுநோய் அடிப்படையிலான பிளாஸ்மா செல்கள் எலும்பு மஜ்ஜையில் குவிய ஆரம்பிக்கும்.

பிளாஸ்மா செல்கள் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன, இது கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும். இந்த புற்றுநோய் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. பொதுவாக இந்த பிரச்சனை சாதாரண பிளாஸ்மாவில் இருந்து தொடங்கி எலும்பு மஜ்ஜை வரை பரவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Cancer Fighting Foods: புற்றுநோயை தடுக்கும் சூப்பட் ஃபுட்ஸ் இதோ..

இரத்த புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள்

  • இரத்த புற்றுநோயைத் தவிர்க்க, நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய வேண்டும். யோகா மற்றும் பிராணாயாமம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையும் குறைகிறது.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • சில சமயங்களில் மரபணு காரணங்களாலும் இந்தப் பிரச்சனை வரலாம்.
  • இந்த நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், அதை அலட்சியம் செய்யக்கூடாது.
  • இரத்த புற்றுநோயைத் தவிர்க்க, நீங்கள் ஆரோக்கியமான உணவை தவறாமல் எடுக்க வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

Mouth Cancer: வாய் புற்றுநோயின் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content