Thu Oct 29, 2026 | 05:45 PM IST

After Waxing Tips: வேக்சிங் செய்த பின் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்க இந்த 4 குறிப்புகளை பின்பற்றவும்!

After Waxing Tips: வேக்சிங் செய்த பின் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்க இந்த 4 குறிப்புகளை பின்பற்றவும்!After Waxing Tips: வேக்சிங் செய்த பின் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்க இந்த 4 குறிப்புகளை பின்பற்றவும்!

How to Prevent Dark Skin Spots After Waxing: பெண்கள் அடிக்கடி கை, கால் மற்றும் பிற பகுதிகளில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற வேக்சிங் செய்வது வழக்கம். இதனால், தேவையற்ற முடிகளை எளிமையாக அகற்றலாம். ஆனால், வேக்சிங் செய்த பின்னர் பலரின் தோல் கருப்பு நிறமாக மாறும்.

இன்னும் சிலருக்கு, வேக்சிங் செய்த பிறகு தோலில் சொறி ஏற்பட்டு, பிறகு சிவப்பாகத் தோன்றும். வேக்சிங்க்குப் பிறகு உங்கள் சருமமும் கருப்பாக மாறினால், அதை சரி செய்வதற்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் கூறுகிறோம். இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

அலோ வேரா அப்ளை செய்யவும்

வேக்சிங் செய்திருந்தால் உடனே கற்றாழை பயன்படுத்தலாம். சோற்றுக்கற்றாழையை தடவினால் சருமத்தில் உள்ள சிவத்தல் நீங்கும். இது தவிர, வேக்சிங்குப் பிறகு ஏற்படும் கருமையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இதற்கு கற்றாழையின் சதையை தனியாக எடுக்கவும். இப்போது அதை வேக்சிங் செய்த பகுதியில் தடவவும். பின்னர், அரை மணி நேரம் கழித்து தோலை தண்ணீரில் சுத்தம் செய்யவும்.

ஐஸ் கட்டியை பயன்படுத்தவும்

வேக்சிங்குப் பிறகு, பலரின் தோல் சிவப்பாக மாறத் தொடங்குகிறது. அதுமட்டுமின்றி சருமம் கருப்பாக மாற ஆரம்பிக்கும். உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால், வாக்சிங் செய்த பிறகு பாடி ஐசிங்கைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு துண்டு ஐஸ் கட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை தோலில் மெதுவாக தேய்க்கவும். பாடி ஐசிங் சருமத்தை குளிர்விக்கும் மற்றும் சரும சிவத்தலையும் நீக்கும். மேலும், சருமத்தில் கரும்புள்ளிகள் இருக்காது.

இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

தேங்காய் எண்ணெய் தடவவும்

வாக்சிங் செய்த பிறகு சருமம் கருமையாகாமல் இருக்க தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். வேக்சிங் செய்த பிறகு, இந்த எண்ணெயை உங்கள் தோலில் தடவவும். வேண்டுமானால் அரை மணி நேரம் கழித்து நீங்களும் குளிக்கலாம். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும். இது சருமத்தின் சிவப்பைக் குறைத்து, கரும்புள்ளிகளைத் தடுக்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் வேக்சிங்குப் பிறகு சருமத்தில் கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் ஆப்பிள் வினிகர் சேர்க்கவும். இப்போது அதை உங்கள் தோலில் தடவவும். ஆப்பிள் சைடர் வினிகரில் இயற்கையான ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இது சொறி மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இது சருமத்தின் வீக்கம் மற்றும் சிவப்பையும் நீக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Ice Bowl Facial: ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் முகத்தை பளபளப்பாக்க ஐஸ் கட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.