$
ஆரம்பகால எச்ஐவி அறிகுறிகள் சாதாரணம் ஜலதோஷம் போலவே தோன்றும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் எளிமையாக இருந்தாலும், நாட்கள் செல்ல, செல்ல கடுமையாக இருக்கும் என்பதால் அறிகுறிகளை கவனிக்க வேண்டியது கட்டாயமாகும்.
நோய்த்தொற்றுக்குப் பிறகு முதல் சில வாரங்களில் (அக்யூட் எச்.ஐ.வி தொற்று அல்லது கடுமையான ரெட்ரோவைரல் சிண்ட்ரோம் எனப்படும் நிலை) காய்ச்சல், வலிகள் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை ஏற்படும். ஆனால் கடுமையான நோய்த்தொற்றுக்குப் பிறகு, எச்ஐவி தீவிரம் அடைவதால், இது பெரும்பாலும் அறிகுறியற்றதாக மாறிவிடும் என்கின்றனர்.
எனவே எச்ஐவி நோயை பெண்கள் கண்டறிவதற்கான சில ஆரம்ப கால அறிகுறிகள் இதோ…
1.காய்ச்சல், சளி ஏற்படுவது:
99.5 முதல் 101 டிகிரி வரை லேசான காய்ச்சல் இருந்தாலும் அது எச்.ஐ.வி. அறிகுறியாக கருதப்படுகிறது. காய்ச்சல் பொதுவாக ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும், ஆனால் அது ஒரு நாளுக்கு மேல் தோன்றும். உடல் காய்ச்சல் வைரஸை எதிர்த்து போராடும்,என்றாலும் எச்.ஐ.வி. வைரஸுக்கு எதிராக போராட இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2.இரவில் வியர்வை:
கரண்ட் இல்லாத இரவில் எப்படி வியர்த்து கொட்டுமோ அதுபோல், இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென வியர்வை அதிகரிப்பது எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறியாகும். இது சாதாரணமான வியர்வையாக இல்லாமல், உடல் முழுவதும் நனையும் அளவிற்கு தீவிரமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஒரு காய்கறி போதும்!
எச்.ஐ.வி இரவில் வியர்வையை ஏற்படுத்தும் என்றாலும், மாதவிடாய், மோனோநியூக்ளியோசிஸ் மற்றும் லிம்போமா மற்றும் லுகேமியா போன்ற புற்றுநோய்கள் உட்பட பல சாத்தியமான நோய்களுக்கும் இது பொதுவான அறிகுறியாகும். எனவே உங்களுக்கு சில இரவுகளில் படுக்கை நனையும் அளவிற்கு வியர்வை வந்தால், நிச்சயமாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
3.சரும பிரச்சனைகள்:
எச்.ஐ.வி அறிகுறிகளை அனுபவிக்கும் சிலர் தங்கள் கைகள், உடற்பகுதி மற்றும் கால்கள் உட்பட உடல் முழுவதும் வெளிர் சிவப்பு சொறி இருப்பதைக் கவனிக்கிறார்கள். தோலில் ஏற்படக்கூடிய இந்த சிவப்பு சொறியானது, ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4.தூக்கம், சோர்வு:
எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் வாரத்திலேயே உறக்கம்,சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். தினந்தோறும் செய்யக்கூடிய வேலைகளை செய்வது. வாகனம் ஓட்டுவது, அலுவலக வேலைகள் என அன்றாட பணிகளை செய்யக்கூடிய மிகவும் சோர்வாக உணர்வீர்கள். மேலும் உடல் முழுவதும் வலி, எழுந்து நடக்கக்கூட சிரமப்படுவது போன்றவையும் ஏற்படும்.
5.ஈஸ்ட் தொற்று:
ஈஸ்ட் இயற்கையாகவே பெண்களின் வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் வாழும் நுண்ணிய பூஞ்சைகள். நீங்கள் முதலில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும்போது, அவை கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து, ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்.
நீரிழிவு போன்ற நிலைமைகள் பொதுவாக ஈஸ்ட் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன - மேலும் எந்தவொரு அடிப்படை நோய்களும் இல்லாத சில பெண்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட் தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.
6.திடீர் எடையிழப்பு:
சிகிச்சை அளிக்கப்படாத HIV ஆனது கொழுப்பு மற்றும் எடையிழப்பை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் வைரஸ் தொற்று பசியின்மையை ஏற்படுத்துவதால், உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடைப்பட்டு எடை குறைகிறது.
எனவே உங்களுடைய எடை எதிர்பாராத அளவிற்கு திடீரென குறையும் போது, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image source: Freepik