Tips To Take Care Of New Mothers: பெண்களுக்குக் கர்ப்ப காலம் என்பது கடினமான மற்றும் சுகமான பயணமாகும். அதே போல பிரசவத்திற்குப் பிறகும் குழந்தை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. இதில் புதிய தாய்மார்கள் கர்ப்ப காலத்திலும், அதன் பின்னரும் பல பிரச்சனைகளைச் சந்திப்பர். குறிப்பாக, தங்களது உடல்நலத்தைக் காட்டிலும் குழந்தைகளின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவர்.
எனினும் அனைத்து புதிய தாய்மார்களும் தங்களது குழந்தைகளின் கவனிப்புடன், சுய கவனிப்பில் ஈடுபடுவதும் முக்கியமாகும். ஆனால், புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனித்துக்கொள்வதிலும், குறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றங்களைச் சரிசெய்வதிலும் தங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில் சிரமப்படுவர். இது கடினமானதாக இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் போதும், பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு சுய கவனிப்பு முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Tips to Feed kids: உங்க குழந்தை சாப்பிட அடம்பிடிக்குதா?… இப்படி ஊட்டிப்பாருங்க!
புதிய தாய்மார்களுக்கான உடல் ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியமான, சுவையான உணவு
கர்ப்ப காலத்திற்குப் பிறகு, தாய்மார்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளின் நலனுக்கும் ஏற்ப ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நிறைய புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓய்வெடுப்பது
புதிய தாய்மார்கள் குழந்தையைக் கவனிப்பது மற்றும் தூக்க அட்டவணையை சார்ந்து இருப்பதால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். அதிலும் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் வரை, தாய்மார்கள் ஆறு முதல் எட்டு மணி நேரம் நல்ல தூக்கத்தைப் பெறுவதே கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும். எனவே புதிய தாய்மார்களின் தூக்க சுழற்சியானது, குழந்தையின் தூக்க சுழற்சியைப் பொறுத்தே அமைகிறது. மேலும் தூக்கமின்மை தாய்ப்பாலின் உற்பத்தியை பாதிக்கலாம். எனவே சரியான நேரத்தில் ஓய்வெடுப்பதை தாய்மார்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது
புதிய தாய்மார்கள், கர்ப்பத்திற்குப் பிறகு படிப்படியாக லேசான பயிற்சிகளைச் செய்ய தொடங்க வேண்டும். இவ்வாறு உடற்பயிற்சி செய்வது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவை மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Kids Drinks: கொளுத்தும் வெயிலில் கூலான ட்ரிங்ஸ்! வீட்டிலேயே குழந்தைகளுக்கு இப்படி செஞ்சி குடுங்க
நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருத்தல்
குழந்தை வளர்ப்பு பொதுவாகவே சவாலான ஒன்றாகும். எனினும், எப்போதும் கோபத்துடனும் எரிச்சலுடனும் இருப்பது உடல் நிலையைப் பாதிக்கலாம். இது குழந்தையையும் பாதிக்கலாம். எனவே குழந்தையைக் கையாளும் போது பொறுமையுடன் கையாள்வது நல்லது. பிறந்த குழந்தையை அரவணைப்புடன் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
நீரேற்றமாக இருப்பது
புதிய தாய்மார்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதன் படி, நாள்தோறும் 8 முதல் 10 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரேற்றமாக வைத்திருக்கலாம்.
சுய பரிசோதனை செய்வது
புதிய தாய்மார்கள் பரபரப்பான வாழ்க்கையை சரி செய்யும் போது, பல சமயங்களில் தங்களை சுயபரிசோதனை செய்வதை மறந்து விடுகின்றனர். புதிதாக பிறந்த தாய்மார்கள் தினமும் குறைந்தது சில நிமிடங்களாவது தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் அமைதியாக உணர வைக்கவும், எதிர்காலத்திற்கான உந்துதலை உணர வைக்கவும் உதவுகிறது.
இவை அனைத்தும் புதிய தாய்மார்கள் தங்களது நல்வாழ்வுக்கான சுய பாதுகாப்பு குறிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: தாய்மார்களே… குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க இத செய்யுங்க!
Image Source: Freepik