மணப்பெண்களுக்கான 5 பானங்கள் - இதைக் குடித்தால் ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது!

  • SHARE
  • FOLLOW
மணப்பெண்களுக்கான 5 பானங்கள் - இதைக் குடித்தால் ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது!

இளநீர்

இளநீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதுடன், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.இளநீரில் சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. இளநீரைத் தொடர்ந்து குடிப்பதனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாகப் பெறலாம்.

drink-for-brides-to-get-healthy-and-glowing-skin

கிரீன் டீ

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கிரீன் டீ உதவுகிறது. இரும்பு, தாமிரம், மெக்னீசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் E ஆகியவை கிரீன் டீயில் காணப்படுகின்றன. தொடர்ந்து க்ரீன் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது. மேலும், சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கிரீன் டீ பருகலாம் .

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ பால்

மஞ்சள்-குங்குமப்பூ பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், பலவீனம், சோர்வு போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்வதில் உடல் பலவீனமாக உணர்ந்தால், இந்த மஞ்சள் மற்றும் குங்குமப்பூ பால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதனைக் குடிப்பதன் மூலம் சருமம் பளபளப்பாக இருப்பதோடு, கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் பிரச்சனையும் நீங்குகிறது.

தாமரை விதை பால் 

தாமரை விதை பால் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.இதைச் செய்ய, தாமரை விதையை லேசாக வறுத்துக்கொள்ளவும்.பிறகு, மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் பொடியைப் பாலுடன் சேர்த்து நீங்கள் விரும்பும் நேரத்தில் குடிக்கலாம். இவ்வாறு செய்வதால், சருமம் பொலிவுடன் இருப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் பலப்படும்.தாமரை விதை பாலில் பாஸ்பரஸ், கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

drink-for-brides-to-get-healthy-and-glowing-skin

ஆரஞ்சு சாறு

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரஞ்சு சாறு உதவுகிறது. இதில் வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் A போன்றவை நிறைந்துள்ளது. இதனைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் பளபளக்கும். ஆரஞ்சு சாறு தொடர்ந்து குடிப்பதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கேரட் மற்றும் பீட்ரூட் சாறு

கேரட் மற்றும் பீட்ரூட் சாறு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதைக் குடிப்பதால், உடல் எடை குறைவதோடு, சருமமும் பளபளப்பாகும். கேரட் மற்றும் பீட்ரூட் சாறில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைத் தொடர்ந்து குடிப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாகவும் இருக்கும்.

இந்தப் பானங்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. ஆனால் உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை இருந்தால், மருத்துவரை ஆலோசித்தபிறகு உட்கொள்ள தொடங்குங்கள். 

Image Source: Freepik

Read Next

இயற்கை முறையில் மேக்கப்பை அகற்ற வேண்டுமா? உங்களுக்கான வழிகள் இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்