Eye Health: ஆடி மாத திருவிழாக்கள் தொடங்கிவிட்டது. அனைத்து பகுதிகளிலும் அம்மனுக்கு விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்து ஆவனி மாதம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, அடுத்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விரதம் என தொடர்ச்சியாக விரத காலங்கள் தொடங்கிவிட்டது.
பலரும் கடைபிடிக்கும் விரதங்களில் ஒன்று உண்ணாவிரதம். குறிப்பிட்ட வேளையில் உண்ணாமல் இருப்பது வெறும் நீராகாரம் போன்ற உணவு முறையை பலர் கடைபிடிப்பார்கள். விரதத்தில் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும் ஒரு சில கவனிக்க வேண்டிய பிரச்சனைகளும் உள்ளது. விரதத்திற்கு அப்பாற்பட்டு சிலர் வேலைப்பழு காரணமாகவே சாப்பிடாமல் இருப்பார்கள்.
சாப்பிடாமல் நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், வயிற்றில் வாயு போன்ற பிரச்சனை தொடங்கும். இவையெல்லாம் தெரியும் என்றாலும் சாப்பிடால் இருந்தால் கண்களில் பிரச்சனை ஏற்படும் என கூறப்படுகிறது. இது உண்மையா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிடாமல் இருப்பது கண் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
சாப்பிடாமல் இருப்பதால் கண்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படு் என முழுமையாக சொல்லிவிட முடியாது. அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் விரதம் இருப்பவர்களின் கண்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். சரியான உணவுப் பழக்கம் இல்லாததால், கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது.
நீண்ட நேரம் கண்களில் வறட்சி நீடித்தால், கண்கள் பாதிக்கப்படலாம். அதே சமயம், உங்கள் உடலில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் குறைவாக உணவு உட்கொள்வதால், கண் பார்வையும் பாதிக்கப்படும். உணவுக் கோளாறு உள்ளவர்களுக்கு கண் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.
கண் நலனிற்கு ஆரோக்கியமான உணவு முக்கியம்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும், எனவே அவற்றின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்.
உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவதால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ குறைபாடு இரவில் குருட்டுத்தன்மை மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே வைட்டமின்-ஏ குறைபாட்டை சமாளிக்க, கேரட், கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடும் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்ரூட் பருப்புகள், ஆளிவ் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. ஆரஞ்சு, கிவி மற்றும் ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Source: FreePik