Masturbation Side Effect: சுயஇன்பம் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்குமா?

  • SHARE
  • FOLLOW
Masturbation Side Effect: சுயஇன்பம் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்குமா?


Does Masturbation Affects Sperm Count: நம் சமூகத்தில் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இன்னும் இல்லை. தகவல் இல்லாததால், மக்கள் தாங்கள் பார்ப்பதையும், கேட்பதையும் உணையாக கருதிகிறார்கள்.  பெரும்பாலும் மக்கள் யாருடனும் பாலியல் விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறார்கள். இன்றும் கூட, பிரச்னைகளை எதிர்கொண்டாலும், மருத்துவரின் ஆலோசனையைக் கூடத் தவிர்க்கும் பலர் உள்ளனர்.

சுயஇன்பம் பற்றி பல விஷயங்கள் கூறப்படுகின்றன. சுயஇன்பம் உடலை வலுவிழக்கச் செய்வதோடு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், சுயஇன்பம் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது மற்றும் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. இது குறித்து விரிவாக இங்கே காண்போம். 

சுயஇன்பம் விந்தணு எண்ணிக்கையை குறைக்குமா? (Does Masturbation Cause Low Sperm Count?)

சுயஇன்பத்திற்கும் விந்து பற்றாக்குறைக்கும் நேரடி தொடர்பு இல்லை. அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் செய்பவர்கள் உடல் ரீதியாக சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்காது. பற்றாக்குறை இல்லை. சுயஇன்பத்தால் விந்து பற்றாக்குறை என்ற பேச்சு முற்றிலும் தவறானது என்று பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சமீர் கூறினார். 

இதையும் படிங்க: ஆண்களே உஷார்! மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்! இல்லை என்றால் விந்தணு பாதிக்கும்!

விந்து குறைபாடு எப்படி ஏற்படுகிறது? (What Causes Low Sperm Count?)

குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கு பல காரணங்கள் இருக்கலாம். உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் உடல் ஆரோக்கிய நிலைகளும் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு-

* உடல் பருமன் 

* போதை நுகர்வு

* விரைகளின் அதிக வெப்பம்

* பால்வினை நோய்கள்

* மன அழுத்தம் 

* சமநிலையற்ற உணவு

தொடர்ந்து 1-2 நாட்கள் சுயஇன்பம் செய்துவிட்டு, சில நாட்கள் நிறுத்தினால், மீண்டும் விந்தணுக்களின் எண்ணிக்கை சாதாரணமாகிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்கள் தொடர்ந்து சுயஇன்பத்தில் ஈடுபட்டால், விந்தணுக்கள் விரைவாக மீட்கப்படுவதற்கு நல்ல உணவைப் பின்பற்ற முயற்சிக்கவும். இது தவிர, மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இவை விந்தணுக்களின் தரத்தை பாதித்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே, நல்ல உணவைக் கடைப்பிடித்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

Image Source: Freepik

Read Next

Margazhi viratham Benefits:கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்