Doctor Verified

புகைப்படங்களுக்கு மட்டுமல்ல.. புற்றுநோயையும் கண்டறியும் AI – மருத்துவர் விளக்கம்

AI மருத்துவத்தில் புதிய புரட்சி! DREM எனப்படும் உலகின் முதல் சட்டபூர்வ AI மருத்துவ கருவி தோல் புற்றுநோயை கண்டறிகிறது. டாக்டர் மோகன லக்ஷ்மி விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
புகைப்படங்களுக்கு மட்டுமல்ல.. புற்றுநோயையும் கண்டறியும் AI – மருத்துவர் விளக்கம்


உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் அடையாளம் போன்ற துறைகளில் மட்டுமே அதிகம் பேசப்பட்ட AI, தற்போது புற்றுநோய் கண்டறிதலில் அசாதாரண முன்னேற்றம் கண்டுள்ளது. இதுகுறித்து தோல் நிபுணர் டாக்டர் மோகன லக்ஷ்மி முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

உலகின் முதல் சட்டபூர்வ AI மருத்துவ கருவி

Skin Analytics நிறுவனம், உலகின் முதல் சட்டபூர்வ அனுமதி பெற்ற AI மருத்துவ கருவியை உருவாக்கியுள்ளது. இதற்கு “DREM” என்று பெயரிட்டுள்ளது. இந்த கருவி மருத்துவரின் நேரடி பார்வை இல்லாமலேயே சுயமாக மருத்துவ முடிவுகளை எடுக்கக் கூடிய திறனை பெற்றுள்ளது.

குறிப்பாக, தோலில் ஏற்படும் மச்சங்கள் (Moles) மற்றும் சருமக் காய்ச்சல்கள் (Lesions) ஆகியவற்றை ஆய்வு செய்து, ஆரம்ப நிலை புற்றுநோயை உடனடியாக கண்டறியும் திறன் கொண்டது.

எப்படி செயல்படுகிறது?

AI கருவி பயிற்சி அடிப்படையிலான தரவுகளின் (Training Data) மூலம் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகளின் தோல் புகைப்படங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை வைத்து மாடல் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுவான தோல் புற்றுநோய் (Common Skin Cancer), ஆரம்ப நிலை தோல் பிரச்சினைகள், மாலிக்னன்ட் (Malignant) நிலைகள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறியும் திறன் பெற்றுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: மார்பக புற்றுநோயை எவ்வாறு ஆரம்பத்திலேயே கண்டறிவது.? மருத்துவர் விளக்கம்.. 

பரிந்துரைகள் வழங்கும் திறன்

DREM கருவி, நோயாளியின் தோல் பிரச்சினையை ஆய்வு செய்த பின், தேவையான ட்ரிகர் பரிந்துரைகளை (Trigger Recommendations) வழங்குகிறது. அதாவது, உடனடி சிகிச்சை தேவைப்படுகிறதா? மருத்துவ பரிசோதனை அவசரமா? இல்லை சாதாரண மருந்துகள் போதுமா? என்பதனை AI கருவி தானாக தீர்மானிக்கிறது. இதன் மூலம், தோல் புற்றுநோய் கண்டறிதல் வேகமாகவும், துல்லியமாகவும் நடைபெற முடியும்.

ஏன் இது முக்கியம்?

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது உயிரைக் காப்பாற்றும் முக்கிய காரணி. பலர் தாமதமாக மருத்துவரை அணுகுவதால், நோய் பரவிய பின் தான் கண்டறியப்படுகிறது. இதுபோன்ற AI கருவிகள், ஆரம்ப நிலை தடுப்பில் வாழ்வாதார விகிதத்தை (Survival Rate) உயர்த்தும்.

View this post on Instagram

A post shared by Dr.R.M.MOKANALAKSHMI | DERMATOLOGIST | CHENNAI (@dr.mokanalakshmi_derm)

நம்பிக்கையான எதிர்காலம்

AI மருத்துவத் துறையில் மனிதர்களின் துணையாக இருக்க முடியும். அது மருத்துவர்களை மாற்றாது, ஆனால் நோய்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை பெற உதவும். நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ஒரே விஷயம் – புற்றுநோயில்லாத உலகம் என்று டாக்டர் மோகன லக்ஷ்மி கூறினார்.

இறுதியாக..

செயற்கை நுண்ணறிவு (AI) மருத்துவத்துறையில் இடம்பிடிப்பது, நோயாளிகளின் வாழ்நாள் நீடிப்புக்கும், சிகிச்சை திறனுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது சாத்தியமாகியுள்ளதால், மனிதகுலம் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு முன்னேறுகிறது.

Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான மருத்துவ அறிவுரையாகும். இது தனிநபர் சிகிச்சைக்கானது அல்ல. புற்றுநோய் அல்லது பிற ஆரோக்கியச் சிக்கல்களுக்கு தகுதியான மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை புற்றுநோய்.. அதன் முக்கியமான 5 காரணங்கள் இதோ

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 30, 2025 14:00 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்