இப்போதெல்லாம் டயப்பர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இவை சிக்கனமானவை மற்றும் குழந்தைக்கு மிகவும் வசதியானவை. இருப்பினும், குழந்தைகளுக்கு காட்டன் துணி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டயப்பர்கள் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
டயப்பரா.? அல்லது சாதாரன காட்டன் துணியா.? உங்கள் குழைந்தைகளுக்கு எது அணிவது சிறந்தது என்று யோசிக்கிறீர்களா.? இதற்கான விளக்கத்தை மருத்துவர் ஐசக் அப்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை அறிய, பதிவை முழுமையாக படிக்கவும்.
டயப்பர் Vs காட்டன் துணி
ஒருமுறை பயன்படுத்தும் டயப்பர்களில் சிக்கியுள்ள ஈரப்பதம் மற்றும் செயற்கை பொருட்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, தோல் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும். இதற்கு நேர்மாறாக, பருத்தி துணியில் செயற்கை இரசாயனங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் இல்லை. இது உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது ஏற்கனவே உள்ள நிலைமைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது.
மருத்துவரின் விளக்கம்
குழந்தைகளுக்கு துணி அல்லது டயப்பர் இதில் எதை அணியலாம் என்று யோசிக்கும்போது, இதற்கு மருத்துவர் ஐசக் அப்பாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் டயப்பர் குறித்து அவர் கூறியதாவது, “டயப்பர்கள் மக்குவதற்கு 500 ஆண்டுகள் ஆகும். ஏனென்றால் இவை பல்வேறும் Super Absorbent Polymers மற்றும் Plastics கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை காற்றோம் அற்றவை. மேலும் இவை அதிக வெப்பத்தை தக்க வைத்து, பேக்டீரியா மற்றும் ஃபங்கை போன்றவற்றை வளரச்செய்து, Diaper Rash போன்ற தொற்றுகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். கூடுதலாக இவற்றில் சேர்க்கப்படும் வாசனை திரவியங்கள், இந்த பிரச்னையை இன்னும் அதிகரிக்கும்” என்றார்.
View this post on Instagram
இதனை தொடர்ந்து காட்டன் துணி குறித்து அவர் கூறினார். அதில், “காட்டன் துணி நன்கு காற்றோற்றமானவை. இதில் எந்த கெமிக்கலும் கிடையாது. ஆகையால் இது மிகவும் பாதுகாப்பானது. அமெரிகன் அகாடமி ஆஃப் பீடியாடிரிக்ஸ் புத்தகத்தின் படி, ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு, 8 முதல் 12 டயாப்பர்கள் மாற்ற வேண்டும். எத்தனை பெற்றோர்கள் இதை பின்பற்றுகிறார்கள்.? அதுவும் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால், இன்னும் அதிக டயப்பர்கள் தேவை. டயப்பர் மட்டும் அணிவதால், மலத்தில் இருக்கும் என்சைம், குழந்தைகளின் சருமத்தை கடுமையாக சேதப்படுத்தும்” என்று பெற்றோர்களை அவர் எச்சரித்தார்.