அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார். 87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனையால் காலமானார். இவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.
சரோஜாதேவி தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களிலும் இந்தி மொழியில் 100 கணக்கான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கர்நாடகா மாநிலம் மைசூரில் 1938ம் ஆண்டு பிறந்தார். தனது 17 வயதில் கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் திரையுலகை பொறுத்தவரை எம்ஜிஆர், சிவாசி ஆகியோருடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும்... பார்லர் செல்லாமலே முகத்தை பளபளப்பாக்கலாம்!
சரோஜா தேவி இறுதிச் சடங்கு எப்போது?
தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்ற புகழ் பெற்றவர் சரோஜாதேவி. வயது மூப்பால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று அவரது இல்லத்திலேயே காலமானார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வரும் சரோஜா தேவி மரண செய்தி கேட்ட அந்த ஒரு நொடி மனதை வேதனை அடைய வைத்ததாக திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். நடிகை சரோஜா தேவி அவர்களின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.