$
பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தோல் பராமரிப்புக்கான பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை பருவத்திலிருந்தே, நாம் அனைவரும் நம் தாய்மார்கள் மற்றும் பாட்டிகளிடம் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
காலப்போக்கில், மக்கள் தங்கள் சொந்த தோல் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி, இணையத்தின் இந்த யுகத்தில், பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் இடுகைகள் மூலம் தங்கள் தோல் பராமரிப்பு தொடர்பான இடுகைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி மக்கள் நம்பும் சில விஷயங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் பயன்பாடு உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. இதில், இந்தியாவில் தோல் பராமரிப்பு தொடர்பான சில கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் உண்மை பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்வோம்.
தோல் பராமரிப்பு தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

அதிக தண்ணீர் குடிப்பதால் முகப்பருக்கள் குணமாகுமா?
தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும், ஆனால் அது உங்கள் சருமத்தை நேரடியாக பாதிக்கிறது என்ற கூற்று தவறானது.
அதிகமாக தண்ணீர் குடிப்பது முகப்பரு அறிகுறிகளைக் குறைக்கலாம், ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. முகப்பரு ஏற்பட முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மை. இது தவிர, தோலில் உள்ள பாக்டீரியா, அதிகப்படியான சரும எண்ணெய் உற்பத்தி மற்றும் அடைபட்ட துளைகள் போன்ற காரணிகளும் இதில் அடங்கும். அதேசமயம் நீரேற்றமாக இருப்பது உங்கள் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.
ஸ்க்ரப்பிங் ஸ்ட்ராபெரி தோலை அகற்ற உதவுகிறது
இவ்வாறு செய்வதால் ஸ்ட்ராபெரி தோலில் இருந்து விடுபடாது, மாறாக அது உங்கள் சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ளவர்கள் உடலை ஸ்க்ரப்பிங் செய்வதற்கு ஸ்க்ரப்பிங் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர், இது உங்கள் சருமத்தில் சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும். அதேசமயம் ஸ்ட்ராபெரி தோலை நிர்வகிப்பதற்கு மென்மையான உரித்தல் மற்றும் மாய்ஸ்சரைசிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சூயிங்கம் முகத்தை மெலிதாக மாற்றுகிறது
மக்கள் பெரும்பாலும் சூயிங் கம் பழக்கத்தை முகப் பயிற்சியாகக் கருதுகின்றனர். சூயிங் கம் முக தசைகளுக்கு பயிற்சியளிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள், இது முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும் என நம்புகிறார்கள் ஆனால் இது தவறு. உண்மையில், இது தாடை தசைகளை அதிகரிப்பதன் மூலம் ஒரு சதுர வடிவ முகத்தை உருவாக்கும். உங்கள் முகத்தை மெலிதாக மாற்ற, நீங்கள் ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்க வேண்டும்.
இதுபோன்ற தகவலை இன்னும் நம்ப வேண்டாம். எனவே எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் நம்ப வேண்டாம். இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
image source: freepik