Diabetes patients:சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

  • SHARE
  • FOLLOW
Diabetes patients:சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் அதிகளவான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அப்படிப்பட்டவர்களும் ரத்த தானம் செய்ய நினைப்பார்கள். நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…

சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா?

சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்வது பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் அது அவர்களின் நிலையைப் பொறுத்தது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், உங்களுக்கு வேறு எந்த நோயும் இல்லை என்றால், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு முன், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

can-diabetic-patients-donate- blood

இதையும் படிங்க: Diabetes in children: குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்!

இதய நோய் அல்லது பிற தீவிர நோய்கள் உள்ள நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யவது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

இரத்த தானம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.

  • இரத்த தானம் செய்வதற்கு முன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • இரத்த தானம் செய்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் அல்லது இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • 8 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஆரோக்கியமான உணவை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • காஃபின் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தவிர்க்கவே கூடாது. ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Mushroom For Diabetes: இரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்க இந்த டீயை தினமும் குடியுங்க!

Disclaimer