$
Olive Oil Benefits: சர்க்கரை நோய் ஒரு தீவிர நோயாக பரவி வருகிறது. தேசிய சுகாதார நிறுவனங்களின் படி, "உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் அபாயம் ஏற்படத் தொடங்குகிறது. குளுக்கோஸ் உடலின் முக்கிய சக்தியாகக் கருதப்படுகிறது.
நீங்கள் உண்ணும் உணவு வழியாக தான் உடலுக்கு குளுக்கோஸ் செல்கிறது. அதே நேரத்தில், இன்சுலின் என்பது கணையத்தால் தயாரிக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும், இது குளுக்கோஸ் செல்களுக்குச் செல்ல உதவுகிறது, ஒருவருக்கு நீரிழிவு இருந்தால், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது.
இதையும் படிங்க: மருந்துகள் இல்லாமல் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? சாத்தியக் கூறுகளைத் தெரிந்து கொள்வோம்..
அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் இரத்தத்தில் குவிந்து செல்களை அடைய முடியாமல் போகிறது. சர்க்கரை நோயால் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இது சிறுநீரகம், நரம்பு மண்டலம் மற்றும் இதய ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது சைலண்ட் கில்லர் என்றும் அழைக்கப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நல்ல உணவுப் பழக்கத்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய் உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஆலிவ் எண்ணெயில் பல வகைகள் உள்ளன. இதில் தூய ஆலிவ் எண்ணெயை தேர்ந்தெடுப்பது அவசியம். அதாவது சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெயை வாங்குவது முக்கியம். நீரிழிவு நோய்க்கு அஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த வழி.
சர்க்கரை நோயாளிகள் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலாமா?
ஆலிவ் எண்ணெயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும், அதிக சர்க்கரையின் காரணமாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதன் அளவைக் குறைக்க உதவுகின்றன.
இது சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, சர்க்கரை நோயினால் உடலில் பல நேரங்களில் வீக்கம் ஏற்படுகிறது. அதேசமயம் ஆலிவ் எண்ணெயில் உள்ள பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், செல்கள் சேதமடைவதைத் தடுக்கவும் உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய் எவ்வளவு நல்லது?

1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் 14 கிராம் மொத்த கொழுப்பு உள்ளது. அதேசமயம் இதில் நார்ச்சத்து மற்றும் சர்க்கரை எதுவும் இல்லை. இது வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஆலிவ் எண்ணெயில் பைட்டோஸ்டெரால் உள்ளது. இது ஒரு வகை தாவரப் பொருள், இது கொலஸ்ட்ரால் போன்றது. இருப்பினும், இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
ஏனெனில் இது நமது உணவில் இருந்து கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது மற்றும் இதய நோயுடன் தொடர்புடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. ஆனால், ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் பிற நன்மைகள்:
- ஆலிவ் எண்ணெய் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
- ஆலிவ் எண்ணெய் ஆக்ஸினேற்ற அழுத்தத்தை குறைக்கும்.
- ஆலிவ் எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
- இது இரத்த உறைவு அபாயத்தை குறைக்கும்.
- ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
- ஆலிவ் எண்ணெய் அல்சைமர் போன்ற நோய் அபாயத்தையும் குறைக்கும்.
Image Source: FreePik