உங்க முடி தரையை தொட வேண்டுமா? இந்த ஒன்னு போதும்!

  • SHARE
  • FOLLOW
உங்க முடி தரையை தொட வேண்டுமா? இந்த ஒன்னு போதும்!


Benefits Of Dates For Hair Growth: பெண்கள் தங்கள் அழகு மீது அதிகம் கவனம் செலுத்துவர். அதற்காகவே பல அழகு பொருட்களை பயன்படுத்துவர். குறிப்பாக பெண்கள் தங்களது முடி மீது அதிக அக்கரை காட்டுவர். 

பல பெண்களுக்கு நீளமாக முடி வளர்ப்பதே இலட்சியமாக இருக்கும். அதனை பராமரிக்க ஆயுர்வேதம் முதல், சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் வரை பயன்படுத்துவர். ஆனால் சிலருக்கு முடி வளர்ச்சி என்பது சில காரணங்களால் இருக்காது. அந்த நேரத்தில் அவர்கள், அதற்காக மருத்துவத்தை நாடுகிறார்கள். பின் மருத்துவமும் பயனில்லாமல் மன சோர்வு அடைகின்றனர். 

ஆனால் பேரீச்சம் பழம் மட்டும் உங்கள் முடியை வளரச்செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பெண்கள் தினமும் ஒரு பேரீச்சம் பழம் சாப்பிட்டால், முடி நீளமாக வளரும். இது பொடுகு பிரச்னை இல்லாமல் முடி வளர உதவும். மேலும் நரை முடியை தடுக்கவும் இது உதவுகிறது. 

இதையும் படிங்க: Winter Hair Fall: குளிர்காலத்தில் எக்கச்சக்கமா முடி கொட்டுதா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

முடி வளர்ச்சிக்கு பேரீச்சம் பழத்தை எப்படி சாப்பிடுவது? (Dates For Hair Growth)

* பேரீச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து குடிக்கலாம்

* பேரீச்சம் பழ பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்

* பாலுடன் பேரீச்சம் பழத்தை சேர்த்து நன்கு அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்

* பேரீச்சம் பழத்தை நீரில் கலந்து குடிக்கலாம்

பேரீச்சம் பழ எண்ணெயும் உதவலாம்!

பேரீச்சம் பழ எண்ணெயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. இந்த எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வளர தொடங்கும். இந்த பேரீச்சம் பழ எண்ணெயை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் மற்றும் ஆர்கன் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இந்த பதிவில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ, நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தாலோ, நீங்கள் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. 

Image Source: Freepik

Read Next

Winter Hair Fall: குளிர்காலத்தில் எக்கச்சக்கமா முடி கொட்டுதா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்