Doctor Verified

நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த மருத்துவர் கூறும் எளிய இயற்கை வழிகள்!

அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் ஏன் வருகிறது? டாக்டர் சௌரப் சேத்தி கூறும் இயற்கை பானங்கள் மற்றும் தடுப்பு வழிகள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த மருத்துவர் கூறும் எளிய இயற்கை வழிகள்!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள் மற்றும் மனஅழுத்தம் காரணமாக, அமில ரிஃப்ளக்ஸ் (Acid Reflux) என்பது பலருக்கும் தினசரி பிரச்சனையாக மாறியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 10 பேரில் ஒருவருக்கு தினமும் இந்தத் தொல்லை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல், மார்பில் எரிச்சல், வாயில் புளிப்பு சுவை, வீக்கம், வறண்ட இருமல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.


முக்கியமான குறிப்புகள்:-


இந்த அமில ரிஃப்ளக்ஸ் ஏன் வருகிறது, அதை எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற குடல் மருத்துவர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது யூடியூப் பக்கத்தில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் எவ்வாறு ஏற்படுகிறது?

உணவுக்குழாய் மற்றும் வயிற்றுக்கிடையே உள்ள கீழ் உணவுக்குழாய் ஸ்பிங்க்டர் (Lower Esophageal Sphincter) என்ற வால்வு, வயிற்று அமிலம் மேலே செல்லாமல் தடுக்கும். இந்த வால்வு தளர்வாக இருந்தால், வயிற்று அமிலம் உணவுக்குழாயைத் தாக்கி அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இதன் முக்கிய அறிகுறியே நெஞ்செரிச்சல்.

அமில ரிஃப்ளக்ஸ் ஏற்பட முக்கிய காரணங்கள்

  • புகைபிடித்தல்
  • மது அருந்துதல்
  • அதிக உடல் எடை
  • சில மருந்துகள் (ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன், இரத்த அழுத்த மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்கள்)

இந்த காரணங்கள் அனைத்தும் ஸ்பிங்க்டரின் வலிமையைக் குறைத்து, அமில ரிஃப்ளக்ஸை அதிகரிக்கின்றன.

இரவில் அமில ரிஃப்ளக்ஸ் ஏன் அதிகரிக்கிறது?

படுக்கையில் படுத்திருக்கும் போது ஈர்ப்பு விசை குறைவதால், வயிற்று அமிலம் மேலே செல்வது எளிதாகிறது.
அதனால்:

  • படுக்கையின் தலைப்பகுதியை 10–20 டிகிரி உயர்த்தி உறங்க வேண்டும்
  • படுக்கைக்கு செல்லும் 3–4 மணி நேரத்திற்கு முன் உணவு தவிர்க்க வேண்டும்
  • சிறிய அளவில், அடிக்கடி உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

இதையும் படிங்க: நெஞ்செரிச்சல் சாதாரணமா? NHS சொல்வது என்ன?

நெஞ்செரிச்சலைக் குறைக்கும் 4 சிறந்த இயற்கை பானங்கள்

1. தண்ணீர்

வயிற்று அமிலத்தை தளர்த்தி உடனடி நிவாரணம் அளிக்கும்.

2. துளசி தேநீர்

துளசி இலைகளில் உள்ள இயற்கை எதிர்-அழற்சி பண்புகள் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.

3. பெருஞ்சீரகம் தேநீர்

வயிற்று வீக்கம், அமிலத்தன்மை மற்றும் செரிமானக் கோளாறுகளை குறைக்கும்.

4. இஞ்சி தேநீர்

வயிற்றை அமைதிப்படுத்தி, அமில உற்பத்தியை குறைக்க உதவுகிறது.

இறுதியாக..

அமில ரிஃப்ளக்ஸ் என்பது ஒரு சாதாரண பிரச்சனை போல தோன்றினாலும், நீண்ட காலம் தொடர்ந்தால் உணவுக்குழாய் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இயற்கை பானங்கள் மூலம் இந்தத் தொல்லையை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்காக மட்டுமே. அமில ரிஃப்ளக்ஸ் தொடர்பான மருந்துகள் அல்லது உணவு மாற்றங்களை மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

சளி–இருமலுக்கு வீட்டிலேயே தீர்வு? ஹோமியோபதி மருத்துவர் பரிந்துரைக்கும் ஆடாதோடா மருந்து

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 22, 2025 21:39 IST

    Published By : Ishvarya Gurumurthy