Doctor Verified

குளிர்காலத்தில் ஹேசல்நட்ஸ் சாப்பிட வேண்டிய 5 முக்கிய காரணங்கள்..

குளிர்காலத்தில் ஹேசல்நட் சாப்பிடுவதின் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றிய முழு விளக்கம். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், சரும பராமரிப்பு, ஆற்றல் மற்றும் செரிமான நன்மைகள் குறித்த தெளிவான தகவல் இங்கே.
  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் ஹேசல்நட்ஸ் சாப்பிட வேண்டிய 5 முக்கிய காரணங்கள்..

குளிர்காலம் தொடங்கியதும், உடலின் வெப்பநிலை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். இந்த நிலையில், தினசரி உணவில் உலர் பழங்களைச் சேர்ப்பது மிகவும் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். முந்திரி, பாதாம், வால்நட் மட்டுமல்லாமல், சமீபத்தில் ஹேசல்நட் எனும் உலர் பழமும் குளிர்கால உணவு பட்டியலில் அதிக இடம்பிடித்து வருகிறது. வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இந்த உலர் பழம் ஏன் குளிர்காலத்தில் அதிக நன்மை தருகிறது என்பது பற்றிய தகவல்களையே இங்கு பார்க்கலாம்.


முக்கியமான குறிப்புகள்:-


ஏன் குளிர்காலத்தில் ஹேசல்நட்ஸ் சாப்பிட வேண்டும்?

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குளிர் பருவத்தில் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும். ஹேசல்நட்ஸில் உள்ள Vitamin C, Antioxidants - உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்துகிறது. இதனால் சளி, ஜலதோஷம், வைரஸ் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. தினமும் 5–8 ஹேசல்நட்ஸ் சாப்பிடுவது இயற்கையான immune booster ஆக செயல்படுகிறது.

2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

ஹேசல்நட்ஸில் உள்ள Monounsaturated healthy fats உடலின் கொழுப்பு அளவை சமப்படுத்துகிறது. LDL (கெட்ட கொழுப்பு) குறைய உதவுவதால், இதய நோய் அபாயம் குறைகிறது, இரத்த ஓட்டம் மேம்படுகிறது. குளிர்காலத்தில் இதய பிரச்சனைகள் அதிகரிக்கும் நிலையில் ஹேசல்நட் ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம்.

3. உடலுக்கு நீண்டநேர ஆற்றல்

குளிர்காலத்தில் பலர் சோர்வு, மந்தமான நிலை, வேலைத்திறன் குறைவு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். ஹேசல்நட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், உணவு நார்ச்சத்து உடலுக்கு நீண்டநேர ஆற்றலை வழங்குகிறது. இது energy booster snack ஆக செயல்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் பச்சை பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 5 அசத்தலான நன்மைகள்.!

4. குளிர்கால சரும பராமரிப்புக்கு சிறந்த உணவு

குளிரால் சருமத்தில் வறட்சி, கீறல், பொடுகு போன்றவை அதிகரிக்கும். ஹேசல்நட்டில் உள்ள் Vitamin E, சருமத்தை மென்மையாக்குகிறது, இயற்கையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சரும பளபளப்பை இயற்கையாக மேம்படுத்தும் உணவாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

5. செரிமானத்தை சீராக்கும்

குளிர்காலத்தில் செரிமானம் மந்தமாகும். ஹேசல்நட்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கும், வயிறு உப்புசம் தணிக்கும், அஜீரணத்தை தடுக்கும். இதனால் வயிறு சீராக இயங்க உதவுகிறது.

இறுதியாக..

குளிர்காலத்தில் ஹேசல்நட்ஸை தினமும் ஒரு சிறிய அளவு உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், சரும பளபளப்பு, ஆற்றல் மற்றும் செரிமானம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். உணவு முறையில் இதனை சேர்க்கும் போது அளவு கவனிக்கப்பட வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. நீண்டநாள் உடல்நல பிரச்சனைகள் அல்லது அலர்ஜி இருந்தால் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

குளிர்காலத்தில் பச்சை பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 5 அசத்தலான நன்மைகள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 26, 2025 21:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்