Pig Kidney: பன்றியின் கிட்னியுடன் உயிர் வாழ்ந்த முதல் மனிதன் மரணம்.. அதிர்ந்த மருத்துவர்!

  • SHARE
  • FOLLOW
Pig Kidney: பன்றியின் கிட்னியுடன் உயிர் வாழ்ந்த முதல் மனிதன் மரணம்.. அதிர்ந்த மருத்துவர்!


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இருப்பினும் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த 5 வருடங்களுக்கு உள்ளாகவே 2 சிறுநீரகமும் செயல் இழந்திருக்கிறது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையிலேயே டயலாசிஸ் செய்து தனது உயிரை காப்பாற்றி வந்துள்ளார்.

சிறுநீரகம் செயலிழந்த நபருக்கு புதிய சிகிச்சை

இருப்பினும், டயாலிஸ் சிகிச்சை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சரியாக செயல்படவில்லை. உயிருக்கே ஆபத்து என்ற நிலையை அவர் எட்டி வரும் நேரத்தில், மருத்துவர் சில புதிய வழிகளை மேற்கொள்ளலாமா என கோரி அனுமதி கேட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்

அதாவது, மருத்துவர் டாட்சுவா, தன் கடைசி முயற்சியாக பன்றியின் சிறுநீரகத்தை தங்களுக்கு பொருத்தி பார்க்கலாமா என பாதிக்கப்பட்ட நபர் ரிக்ஸ்லாயிடம் அனுமதி கேட்டுள்ளார். சற்று சிந்தித்த பாதிக்கப்பட்ட நபர் ரிக்ஸ்லாய், தானும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை எட்டி வருவது உணர்ந்து வேறு வழியில்லை என மருத்துவரின் ஆலோசனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சம்மதத்துடன் பன்றியின் கிட்னியை பாதிக்கப்பட்ட நபருக்கு பொருத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

பன்றி சிறுநீரகம் பொருத்திய நபர் உயிரிழந்தார்

கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டுள்ளது. அதன்பின் வெற்றிகரமாகவே உயிர் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அவர் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அறுவை சிகிச்சைக்கும் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பன்றியின் சிறுநீரகம் மனிதருக்கு எப்படி பொருந்தும்?

மருத்துவர் டாட்சுவா இதுகுறித்து கூறுகையில், பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்துடைய அளவுக்கு சமமாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளத்துடன் இணைக்கும் போது இது செயல்பட தொடங்கும். அதன்படி இந்த நோயாளிக்கும் சிறுநீரகம் சரியாக செயல்படத் தொடங்கியது.

அதேபோல் பன்றியின் சிறுநீரகம் மனிதரின் உடலுக்கு சரியாக செயல்படத் தொடங்கி உடலில் இருந்து சிறுநீரகமும் பிரிய ஆரம்பித்துள்ளது. இது மிகப் பெரிய வெற்றி என தெரிவித்தார். மேலும் இப்படி செய்வதால் மனிதனுக்கு தேவையான உடலுறுப்பு பற்றாக்குறை குறையும் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

Read Next

ஒரே நாளில் இத்தனை பேருக்கா.? மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.!

Disclaimer

குறிச்சொற்கள்