விமானத்தில் பயணித்த பலருக்கும் தெரியும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாது என்பது. இதிலும் பலருக்கு ஏன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற காரணங்கள் அறியாது. பலர் விமானநிலையம் வரை எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என தெரிந்து, அதை எடுத்துச் சென்று விமானநிலையத்திலேயே விட்டுச் செல்லாவர்கள்.
பயணிகள் எந்தெந்த உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற பட்டியலை பார்க்கலாம். குறிப்பாக விமானத்தில் தேங்காயை எடுத்துச் செல்லக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? தேங்காய் பாதுகாப்பான பொருள்தானே இதில் என்ன பிரச்சனை என பலருக்கும் தோன்றும். ஆம், உலர் தேங்காயை எடுத்துச் சென்றால் அதை விமானநிலையத்திலேயே விட்டுச் செல்ல வேண்டி வரும். விமானத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.
தேங்காய்களை ஏன் விமானத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது?
உலர் தேங்காய் மிகவும் எரியக்கூடிய பொருள். எனவே, செக்-இன் பொருட்களில் அதை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படாது. மேலும் , கை சாமான்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட சாமான்கள் இரண்டிலும் உலர் தேங்காய் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் (தேங்காய் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது) இருப்பதால், இது அதிகம் எரியக்கூடியது. விமானத்தின் உள்ளே வெப்பத்தை எதிர்கொண்டால் அது தீயை ஏற்படுத்தும்.
விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்வது எப்படி?
விமானங்களில் தேங்காய் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தங்கள் இணையதளத்தில் பதிவிட்டப்படி, தேங்காய் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்பட்ட சாமான்களில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. உலர் தேங்காய் அல்லது கொப்பரை தேங்காய் கேபினிலோ அல்லது செக்-இன் சாமான்களிலோ அனுமதிக்கப்படாது.
தேங்காய் ஏன் எடுத்துச் செல்லக்கூடாது?
தி இன்டிபென்டன்ட் வெளியிட்ட தகவலின் படி, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) ஆபத்தான பொருட்கள் பதிவேட்டில் தேங்காய் சரக்குகளில் 4 ஆம் வகுப்பு அபாய பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலர்ந்த தேங்காய் தன்னிச்சையான எரியக்கூடிய திடப்பொருளாக குறிக்கப்படுகிறது என்று IATA கூறுகிறது.
விமானத்துக்குள் அனுமதிக்கப்படும் மிகவும் பொதுவான உணவு பொருட்கள்
விமானத்துக்குள் அனுமதிக்கப்படும் மிகவும் பொதுவான உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
தேன் (100 மில்லி வரை, சீல் வைக்கப்பட்ட பாட்டிலில்)
தண்ணீர் பாட்டில் (100 மில்லி வரை)
காற்றோட்டமான பானங்கள் (100 மில்லி வரை)
உலர் கேக்
உலர் பழங்கள் / காய்கறிகள்
இனிப்புகள்
விமானத்துக்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள்
மீன்/இறைச்சி
தேங்காய்
மிளகாய் ஊறுகாய்
மூல உணவுகள் (அரிசி/பருப்பு)
மிளகாய் உட்பட தூள் வடிவத்தில் உள்ள அனைத்து மசாலாப் பொருட்களும்
இவை அனைத்தும் தடைசெய்யப்பட்ட பொருட்களாகும். இனி நீங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தால் இந்த வழிகாட்டுதலின்படி பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
Image Source: FreePik