$
புதிய லான்செட் ஆய்வின்படி, 2050 ஆம் ஆண்டில் புகைபிடிக்கும் விகிதம் ஆண்களில் 21% ஆகவும், பெண்களில் 4% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டளவில் புகைபிடிக்கும் விகிதத்தை வெறும் 5% ஆக குறைப்பது ஆண்களின் ஆயுட்காலம் ஒரு வருடமும் பெண்களுக்கு 0.2 வருடமும் அதிகரிக்கும் என்று சமீபத்திய உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த நேரத்தில் புகைபிடிக்கும் விகிதம் ஆண்களில் 21% ஆகவும் பெண்களில் 4% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தினால் 876 மில்லியன் ஆண்டுகள் வரை மனித உயிர்கள் வாழ முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
புகையிலை தடை ஆய்வு நன்மைகள்
தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், 2006 மற்றும் 2010-க்கு இடையில் பிறந்தவர்களிடமிருந்து புகைபிடிப்பதை தடை செய்தால், 185 நாடுகளில் 2095ம் ஆண்டளவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் இறப்புகளைத் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதைக் குறைக்கும் முயற்சிகளில் நாம் வேகத்தை இழக்கக் கூடாது. புகைபிடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தவிர்க்கலாம் என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகிறது என இன்ஸ்டிட்யூட்டின் மூத்த எழுத்தாளர் ஸ்டீன் எமில் வோல்செட் கூறினார்.
புகையிலை ஏன் தடை செய்ய வேண்டும்?
புகையிலைக்கு முற்றிலும் தடை என்பதை நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகைப்பிடிப்பு பொருள் மற்றும் புகையிலை விற்பனை தடை என்பதை அறிவிப்பது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

நியூசிலாந்து 2009 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்ய 2022 இல் ஒரு சட்டத்தை இயற்றியது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் என்றாலும் ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த சட்டத்தை ரத்து செய்தது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.
புகையிலை தடையால் காப்பாற்றப்படும் உயிர்கள்
இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷனின் (IHME) முன்னணி எழுத்தாளர் ஸ்டெயின் எமில் வோல்செட், புகைபிடிப்பதைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகள் மில்லியன் கணக்கான அகால மரணங்களைத் தடுப்பதில் முக்கியமான ஒன்று எனவும் இதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம் என வலியுறுத்தினார்.
ஆய்வின்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் புகைபிடிப்பதால் உலகளவில் 175 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல நாடுகளில் புகைபிடிக்கும் விகிதத்தை குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், முக்கிய நோய் மற்றும் இறப்புக்கு புகைபிடித்தல் என்பது முக்கிய பங்களிப்பாக உள்ளது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கர்ப்பகால சிகிச்சையின் வெற்றியையும் அது பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. இப்படிச் செய்வதால் அவர்களுக்கு நல்ல உணர்வு ஏற்படும்.
நீங்கள் புகைபிடிக்காமல் புகையை உள்ளிழுத்தால் அதுவும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அதாவது அருகில் உள்ளவர்கள் புகைப்பிடித்தாலும் அது உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புகைபிடித்தல் ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆண்களில் விந்து தரம் குறைகிறது. அதேபோல் விந்தணு எண்ணிக்கையும் குறைகிறது.
புகைப்படிப்பதால் கண்களில் உள்ள Blindspot இருட்டுப்புள்ளி அதிகமாகின்றது. புகைப்பிடிப்பதால் விழித்திரையில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன் குறையும்.
கண்களில் உள்ள இரத்த நாளம் சுருங்கி ஆபத்தான் பின்விளைவை சந்திக்க நேரும். அதேபோல் மேல் குடலின் கீழ்ப்பகுதியில் புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கால்களில் உள்ள இரத்த நாளம் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும்.
Image Source: FreePik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version