பிறந்த குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும்? குழந்தையின் செவித்திறனை எவ்வாறு கண்டறிவது?

  • SHARE
  • FOLLOW
பிறந்த குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும்? குழந்தையின் செவித்திறனை எவ்வாறு கண்டறிவது?


குழந்தைகள் பிறந்ததிலிருந்து மூன்றாவது மாதம்வரை உரத்த ஒலிகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குகின்றனர்.உங்கள் குரலைக் கேட்டவுடன் சிரிப்பார்கள், மேலும் நீங்கள் பேசும்போது அமைதியாகிவிடுவார்கள்.

நான்காவது மாதம் முதல் ஆறாவது மாதம்வரை குழந்தைகளின் கண்கள் ஒலியை நோக்கி நகர்த்தத் தொடங்கும். அவர்கள் வெவ்வேறு நபர்களின் ஒலியை வேறுபடுத்தி, இசையில் கவனம் செலுத்தத் தொடங்குவார்கள்.

ஏழு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான குழந்தைகள் தங்கள் பெயர் அழைக்கப்படுவதற்கு பதிலளித்து, தாய், தந்தை, தாத்தா, பாட்டி  இல்லை, ஆம், இங்கே வா, போன்ற சில பொதுவானவார்த்தைகளில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றத் தொடங்குகிறார்கள்.

when-newborn-baby-start-hearing

ஒரு குழந்தைக்குக் காது கேட்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்ளலாம்?

குழந்தை பிறந்தபிறகு, செவித்திறனை கண்டறிவதற்கான பல சோதனைகள் உள்ளன.இதன் மூலமாகக் குழந்தைக்குக் காது கேட்குமா இல்லையா என்பதை அறியலாம். குழந்தை நல மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர் சில சோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.பொதுவாகப் பெரியவர்களைவிட குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள், ஆதலால் சில சமயங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தை, கதவு மணி அல்லது தொலைபேசியின் சத்தத்தால் எழுந்திருக்கமாட்டார்கள்.இதைச் செவித்திறன் குறைபாடு என்று கருதுவது தவறு.

ஒரு குழந்தையின் காது கேளாமை எப்போது கவலைக்குரியதாக மாறும்?

  • குழந்தை உரத்த ஒலிக்குப் பதிலளிக்காதபோது.
  • பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகும், குழந்தை ஒலிக்குப் பதிலளிக்காமல் ஒலியின் திசையை நோக்கித் தலையைத் திருப்பாமல் இருந்தால். 
  • நீங்கள் குழந்தையின் முன்னால் இருக்கும்பொழுது மட்டும் உங்களைப் பார்த்து, தூரமாக நின்று பேசும்பொழுது உங்களைப் பார்க்கத் தவறினால்.

ஆனால் இந்தக் காரணங்களை மட்டுமே வைத்துக் குழந்தைக்குக் காது கேட்காது என்பதை நிரூபிக்க முடியாது. ஏனெனில் தற்காலிகமாகக் குழந்தைக்குக் காது தொற்று அல்லது சளி காரணமாகக் காது அடைத்து இருந்தால் கூடக் காது கேட்பதில் சிரமங்கள் இருக்கும்.

குழந்தைகளின் காது கேளாமை எப்போது பாதிக்கப்படலாம்?

  • மரபணு காரணங்களால்
  • பிரசவ சமயத்தில், தாய்க்கு ஹெர்பெஸ், தட்டம்மை, ரூபெல்லா போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால்.
  • குறைப்பிரசவம்.
  • பிறவி குறைபாட்டுடன் பிறந்திருந்தால் 
  • மஞ்சள் காமாலை
  • முன்புறம் தொற்று போன்றவை.

பிறந்த குழந்தைக்குக் காது ஓரளவு கேட்டுப் பதிலளிக்கும் திறன் உள்ளது. ஆனால் படிப்படியாக இந்தத் திறன் முன்பை விட மேம்பட வேண்டும். குழந்தையின் காது கேட்கும் திறன் முற்றிலும் இல்லையெனப் பெற்றோர்கள் கருதினால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாகப் பீதி அடைய வேண்டாம், மருத்துவரின் ஆலோசனையின்றி குழந்தைக்கு எந்த வீட்டு வைத்தியத்தையும் முயற்சிக்காதீர்கள். குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

Image Source: Freepik

Read Next

உங்கள் குழந்தைக்கு நல்ல பெயரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?இதோ உங்களுக்கான 13 உதவி குறிப்புகள்

Disclaimer

குறிச்சொற்கள்