Shaving Tips: ஷேவிங் செய்த பிறகு சருமத்தை பாதுகாக்க இதை செய்யவும்!

  • SHARE
  • FOLLOW
Shaving Tips: ஷேவிங் செய்த பிறகு சருமத்தை பாதுகாக்க இதை செய்யவும்!


Shaving Tips: பெரும்பாலான ஆண்கள் தினசரி ஷேவிங் செய்கிறார். சிலர் மாதத்திற்கு ஒருமுறை, வாரத்திற்கு ஒருமுறை என ஷேவிங் செய்கிறார்கள். ஷேவிங் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல, இது நமது தோல் உடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் விஷயமாகும்.

தொடர்ந்து ஷேவிங் செய்வதால் சில சமயங்களில் ஆண்களின் சருமம் வறண்டு போவதோடு பருக்கள் பிரச்சனையும் ஏற்படுகிறது. ஷேவிங் செய்தபின் முறையான வழிகளை கடைபிடிக்கவில்லை என்றால் பக்கவிளைவுகளும் அதிகமாகிறது.

ஆண்கள் ஷேவிங் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

பெரும்பாலான ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு லோஷனை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இது மட்டும் சரியான முறை கிடையாது. ஆண்களின் தோல், பெண்களின் தோலில் இருந்து வேறுபட்டது. அதேபோல் பெண்களை ஒப்பிடுகையில் ஆண்கள் தங்கள் சருமத்தை கவனிக்கும் முறையும் வேறுபட்டதாக இருக்கும்.

ஆண்கள் ஷேவிங் க்ரீம் மற்றும் ரேஸர் பயன்படுத்துவதால் சருமம் கரடுமுரடாகிறது. இதன்காரணமாக சருமமும் பொலிவு இழந்து காணப்படும். இதை சரிசெய்ய என்ன செய்வது என்று பார்க்கலாம்.

எப்போது ஷேவிங் செய்யலாம்?

பெரும்பாலும் ஆண்களின் முடி மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குளித்த பிறகு அல்லது குளிக்கும் போது ஷேவ் செய்தால், முடி மென்மையாக மாறுவதுடன், ஷேவிங் செய்வதன் மூலம் அதுவும் எளிதாக அகற்றப்படும். தண்ணீர் சருமத்தை ஹைட்ரேட் செய்து உங்கள் தாடியை மென்மையாக்கும், இது எளிதாக ஷேவிங் செய்ய உதவும்.

முகத்தை தேய்க்க வேண்டாம்?

பல ஆண்கள் தங்கள் முகத்தை மிகுந்த அழுத்தத்துடன் துடைக்கிறார்கள் அல்லது ஷேவிங் செய்த பிறகு அதை தேய்க்கிறார்கள், இது தோல் எரிச்சல் மற்றும் சிவத்தல் உணர்வை ஏற்படுத்தும். ஷேவிங் செய்த பிறகு உங்கள் தோல் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஷேவிங் செய்த பிறகு, சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், பின்னர் முகத்தை உலர வைக்கவும்.

தோல் பிரச்சனை

ஷேவிங் செய்யும் போது தோலில் காயம் ஏற்பட்டால், உடனடியாக சிறிது கிரீம் அல்லது லோஷன் தடவவும். ஏனெனில் பல நேரங்களில் இந்த வெட்டுக்கள் தோல் தொற்று மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்தும். அதேபோல் ஷேவ் செய்வதற்கு நல்ல தரமான ரேஸரை பயன்படுத்துவது அவசியம்.

ஷேவிங் செய்த பிறகு என்ன க்ரீம் பயன்படுத்தலாம்?

ஷேவிங் செய்த பிறகு, தோல் மிகவும் வறண்டு போகும். இத்தகைய சூழ்நிலையில், ஷேவ் செய்த பிறகு லோஷனைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. ஷேவிங் செய்த பிறகு சருமத்தை ஈரப்பதமாக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ப மாய்ஸ்சரைசரை வாங்கவும்.

ரேஸரை வெந்நீரில் கழுவவும்

பலரும் ஷேவிங் செய்வதற்கு முன்பு பலர் ரேஸரை சரியாக சுத்தம் செய்வதில்லை. . அழுக்கு ரேஸரைப் பயன்படுத்துவதால், சருமத்தில் தொற்று ஏற்படுவதோடு, பருக்கள் பிரச்சனையும் ஏற்படும் . இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, ரேஸரை வெந்நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் பல வகையான தொற்று நோய்களை தவிர்க்கலாம்.

ஷேவிங் செய்த பிறகு சருமத்தை பராமரிக்க ஆண்கள் இந்த குறிப்புகளை பின்பற்றுவது நல்லது. இருப்பினும் வேறு ஏதேனும் தீவிர பிரச்சனை ஏற்பட்டால் நிபுணர் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Image Source: FreePik

Read Next

Tea Tree Oil Benefits: சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு தேயிலை மர எண்ணெய் தரும் நன்மைகள்

Disclaimer

குறிச்சொற்கள்