கருப்பை புற்றுநோய் என்பது, 15 முதல் 44 வயது வரையுள்ள, இனப்பெருக்கத் தகுதியுள்ள பெண்களை பாதிக்கும் ஒன்றாகும். இது பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு புற்றுநோயாகும். கருப்பையின் கீழ்ப்பகுதியை தாக்கும் இந்த புற்றுநோய், ஆண்டுதோறும் சுமார் லட்சக்கணக்கான பெண்களை தாக்குகிறது.
ககருப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?
கருப்பை புற்றுநோய்க்கு குறிப்பிட்ட காரணங்கள் சொல்ல முடியாது. இந்த புற்றுநோய், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) காரணமாக ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறை காரணத்தாலும் இது ஏற்படுகிறது.

இது பரம்பரையில் யாருக்கேனும் கருப்பை புற்றுநோய் இருந்தாலோ, குழந்தை பெறுவதற்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளாலோ ஏற்படலாம். மேலும் புகைப்பிடித்தல், மன அழுத்தம், மரபணு மாற்றங்கள் மற்றும் உடல் பருமன் கூட இதற்கு வழிவகுக்கலாம். இதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. இது குறித்து முழுமையாக அறிய மருத்துவரை அணுகுவது நல்லது.
கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
கருப்பை புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே அறியாமல் விட்டால், கருப்பையை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் இதன் அறிகுறிகளை கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே சரிசெய்ய முயற்சிக்கவும். கருப்பையில் உருவாகும் எல்லா வகை கட்டிகளும் புற்றுநோய் கட்டியாக இருக்க வாய்ப்பில்லை. அதற்காக அதனை அப்படியே விடக்கூடாது. இது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. அவர்களால் இதற்கு தீர்வு காண முடியும்.
கருப்பை புற்றுநோயை ஆரம்ப காலத்தில் அறிவது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் இவை மெதுவாக வளரக் கூடியவை. இருப்பினும் இதனை அறிய சில அறிகுறிகள் உள்ளன. திடீர் எடை இழப்பு, உடலுறவின்போது வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இடுப்பு மற்றும் முதுகு வலி போன்றவை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்று வயிறு பிரச்சனைகளும் இதன் அறிகுறிகளாக இருக்கலாம். இதில் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் அறிந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
கருப்பை புற்றுநோய் சிகிச்சை முறைகள்
கருப்பை புற்றுநோயை அறிய பல சோதனைகள் உள்ளன. இரத்தப் பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்றவை புற்றுநோயை துல்லியமாக அறிய உதவும். உங்களுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தால் கவலைப் படாதீர்கள். இன்றைய அறிவியல் காலத்தில் அனைத்தும் சாத்தியமே. புற்றுநோயை குணப்படுத்த பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை எளிதில் சரிசெய்ய முடியும். சிகிச்சையுடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை இணைப்பதன் மூலம் புற்றுநோயை விரட்டிவிடலாம்.
Image Source: Freepik