Doctor Verified

பவுத்திரத்தை கட்டுப்படுத்தும் மூலிகைகள் – சித்த மருத்துவர் பரிந்துரை!

Fistula Treatment in Siddha: ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பவுத்திரம் (Fistula) என்பது கடும் வலி, எரிச்சல் மற்றும் சீழ் வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான உடல்நலக் கோளாறு. பவுத்திரத்தின் அறிகுறிகள், காரணங்கள், இயற்கை சிகிச்சை முறைகள் மற்றும் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் இங்கே காண்போம். 
  • SHARE
  • FOLLOW
பவுத்திரத்தை கட்டுப்படுத்தும் மூலிகைகள் – சித்த மருத்துவர் பரிந்துரை!

ஆசனவாயில் உருவாகும் சீழ் படிந்த கட்டிகளால் ஏற்படும் நோயே பவுத்திரம் (Fistula). இது கடுமையான வலி, எரிச்சல், வீக்கம் மற்றும் சீழ் வெளியேறும் போது தாங்க முடியாத துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். சீழ் வெளியேறினாலும், உள்ளே இருக்கும் புண்கள் முழுமையாக ஆறாமல் தொடர்வதே இந்த நோயின் முக்கிய சிக்கல்.


முக்கியமான குறிப்புகள்:-


அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் வேண்டாம்

மலத்தில் இரத்தம் அல்லது சீழ் கலந்து வருதல், ஆசனவாய் சுற்றிய வீக்கம், தொடர்ந்து வலி மற்றும் எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை இல்லாமலும் சிகிச்சை பெற முடியும் என சித்த மருத்துவர் எஸ். காமராஜ் தெரிவிக்கிறார்.

குப்பைமேனி – பவுத்திரத்திற்கான பாரம்பரிய மருந்து

குப்பைமேனி (Acalypha indica) கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட மூலிகை. சொறி, சிரங்கு, புண் போன்ற தோல் நோய்களை ஆற்றும் தன்மை கொண்ட இது, பவுத்திரம் போன்ற உள்ளுறுப்பு பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் சித்த மருத்துவர் எஸ். காமராஜ்.

குப்பைமேனி இலைகளை சுத்தம் செய்து, வெயிலில் அல்லாமல் நிழலில் உலர்த்தி, பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை உள்ளுக்குப் பயன்படுத்துவதோடு, சில சருமப் பிரச்சனைகளில் வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற.. இந்த பழங்களை சாப்பிடுங்கள்..

அரிசி திப்பிலி – குடல் மற்றும் மலச்சிக்கல் தீர்வு

திப்பிலி இரண்டு வகைகளில் கிடைக்கிறது. சிறிய வகையான அரிசி திப்பிலி மற்றும் பெரிய வகையான யானை திப்பிலி. இதில் ஏதேனும் ஒன்றை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி, சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

திப்பிலி மலச்சிக்கலைக் குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்கும் தன்மை கொண்டது. கபம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் இதில் உள்ளது.

எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

குப்பைமேனி சூரணம் 100 கிராம், அரிசி திப்பிலி பொடி 100 கிராம். இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் காலை மற்றும் மாலை உணவுக்குப் பிறகு, 2 முதல் 4 கிராம் வரை பசு நெய்யில் குழைத்து சாப்பிட வேண்டும்.

View this post on Instagram

A post shared by Dr S Kamaraj BSMS, DIP in Yoga (@drskamaraj)

எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்?

இந்த மூலிகை கலவையை தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட வேண்டும். இதனால் பவுத்திரம் படிப்படியாக குறையும். 50% மட்டுமே நிவாரணம் கிடைத்தால், மேலும் ஒரு மண்டலம் தொடரலாம் என்கிறார் மருத்துவர்.

கூடுதல் சித்த மருத்துவ பயன்

குப்பைமேனி இலைகளுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தயாரிக்கும் மருந்து, குடல் புழுக்களை அழிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் மற்றும் ஆசனவாய் சுற்றிய கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது. இதுவும் பவுத்திரம் சிகிச்சையில் பயன்படுகிறது.

சிகிச்சை அவசியம் – தாமதம் வேண்டாம்

பவுத்திரம் எளிய நிலையிலா அல்லது சிக்கலான நிலையிலா என்பதற்கேற்ப சிகிச்சை மாறுபடும். நாள்பட்ட நிலைகளில் அறுவை சிகிச்சை அவசியமாகலாம். மேலும், இந்த நோய் மீண்டும் வரக்கூடிய தன்மை கொண்டது. எனவே ஆரம்ப அறிகுறிகளிலேயே மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.

இறுதியாக..

பவுத்திரம் போன்ற வலியான நோய்களை அலட்சியம் செய்வது ஆபத்தானது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, மருத்துவர் ஆலோசனையுடன் சித்த மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தினால், அறுவை சிகிச்சை இல்லாமலும் கட்டுப்படுத்த முடியும். உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றையும் சரிசெய்தல் அவசியம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. இந்த தகவல்கள் சமூக வலைதள பதிவுகள் மற்றும் நிபுணர் கருத்துகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு மருத்துவ முறையையும் பின்பற்றும் முன், தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

வாயுத் தொல்லை, மலச்சிக்கல் – IBS குடல் பிரச்னையின் அறிகுறிகளா? மருத்துவர் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 18, 2025 23:50 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்