பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கான 6 காரணங்கள்

  • SHARE
  • FOLLOW
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கான 6 காரணங்கள்

பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைகான காரணங்கள்: ஹார்மோன்கள் நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.ஹார்மோன் சமநிலையின்மையால் பல பிரச்சினைகள் எழத் தொடங்குகின்றன. ஆண், பெண் இருவருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். ஆனால் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் இருவரிடையே வேறுபடலாம்.ஹார்மோன்கள் சமநிலையின்மையால், சோர்வு, எடை அதிகரிப்பு, PCOD, வீக்கம், வியர்வை போன்ற பிரச்சனைகளைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள்

பெண்கள், தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ஹார்மோன் சமநிலையின்மையை எதிர்கொள்கின்றனர். பெண்களின் மாதவிடாய், பருவமடைதல், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். இது இயல்பானதே. ஆனால் இந்த நாட்களைத் தவிர்த்து மற்ற சாதாரண நாட்களிலும் கூட, பல பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளை எதிர் கொள்கின்றனர். பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள் பின்வருமாறு:

ஆரோக்கியமற்ற உணவுமுறை

நாம் உட்கொள்ளும் உணவு நமது ஹார்மோன்களை நேரடியாகப் பாதிக்கிறது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவு முறையால், பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மையை எதிர்கொள்கின்றனர். உங்களுக்கும் சமச்சீரற்ற நிலையில் ஹார்மோன்கள் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

மன அழுத்தம்

நீங்கள் அடிக்கடி மன அழுத்தத்தில் இருந்தால், நீங்கள் ஹார்மோன் சமநிலையின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் வாழ்ந்து, ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளை அனுபவித்தால், மன அழுத்தமின்றி வாழ முயற்சி செய்யுங்கள்.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள், பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பின், ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். உங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க, கருத்தடை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு

பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்களில், தைராய்டும் ஒரு முக்கிய காரிணியாக இருக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இரண்டும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். உங்களுக்குத் தைராய்டு இருந்தால், உங்கள் ஹார்மோன்களை சீராக வைத்திருக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

அயோடின் குறைபாடு

பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மைக்கு அயோடின் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படும்போது, அவர் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளை உணரலாம். எனவே, உங்கள் உணவில் போதுமான அளவு அயோடினை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

செயலற்ற வாழ்க்கை முறை

உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையை வழிநடத்தும் பெண்கள், ​ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கைமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், கருத்தடை மாத்திரைகள், தைராய்டு, அயோடின் குறைபாடு மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். நீங்கள் ஹார்மோன் சமநிலையின்மை அறிகுறிகளை அனுபவித்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

images source: freepik

Read Next

ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெண்கள் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்

Disclaimer

குறிச்சொற்கள்