சீரற்ற ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கான சில உணவுக் குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவுகள் : பெண்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும், உடலில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிறார்கள. மாதவிடாய், கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டங்களிலும் அவர்களின் ஹார்மோன் அளவுகள் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. சில சூழ்நிலைகளில் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது, சில சூழ்நிலைகளில் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. ஆனால் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும், குறைவதும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் உடலில் ஹார்மோன்கள் சமநிலையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களும் சமநிலையற்றதாக இருந்தால், அவற்றை சமநிலைக்கு கொண்டு வர சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். இதற்கான இயற்கை தீர்வை, இந்த பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்.
முக்கிய கட்டுரைகள்
பெண்களில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவுகள்
ஆளிவிதைகள்
ஆளி விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன.ஆளி விதைகளில் உள்ள லிக்னன்ஸ்(Lignans) மற்றும் இரசாயன கலவைகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன.உடலில் ஹார்மோன்களின் அளவை சீராக்க, நீங்கள் ஆளிவிதைகளை ஸ்மூதீஸ், சாலடுகள் அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.ஆளி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உலர் பழங்கள்
உலர் பழங்களில் நார்ச்சத்து, புரதம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்றதாக இருந்தால், உங்கள் அன்றாட உணவில் உலர் பழங்களை சேர்த்து கொள்ளலாம். உலர் பழங்களிலும் அதிக அளவு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. உடலில் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுள்ள பெண்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்க உலர் பழங்களைச் சாப்பிடலாம். பாதாம், வால்நட், பேரீச்சம்பழம் அல்லது ஆப்ரிகாட் போன்ற உலர் பழங்களைக் காலை உணவுடன் எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
பூண்டு
பூண்டின் சுவை காரமாக இருக்கும். பெண்கள் உடலில் ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருக்க, தங்கள் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளலாம். பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம். பெண்களின் மற்ற பிரச்சனைகளுக்கும் பூண்டை உட்கொள்வது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
பீச்
உடலில் ஹார்மோன் அளவு குறைவாக இருக்கும்போது நீங்கள் பீச் சாப்பிடலாம். பல வகையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் பீச்சில் காணப்படுகின்றன. பீச்சில் உள்ள லிக்னன்ஸ் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாக செயல்படுகின்றன. பெண்கள் தங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க, பீச் பழத்தை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.பீச் சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்களை சீராக்கலாம், மேலும் மற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். பீச் சாப்பிடுவது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
நாவல் பழம்
நாவல் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. பெண்கள் தங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க நாவல் பழங்களை சாப்பிடலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளையும் உட்கொள்ளலாம். இது பைட்டோ ஈஸ்ட்ரோஜனாக செயல்படுகிறது, மேலும் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவையும் அதிகரிக்கிறது.
டோஃபு(சோயா பாலில் செய்யப்பட்ட பன்னீர்)
டோஃபு புரதத்தின் சிறந்த மூலமாகும். பெண்கள் தங்கள் உடலில் ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க டோஃபுவை சாப்பிடலாம். டோஃபு பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆகையால் ஹார்மோன்கள் சமநிலையில் இருந்தாலும், நீங்கள் டோஃபு சாப்பிடலாம்.இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
சோயாபீன்
சோயாபீனில், புரதம் உட்பட பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், சோயாபீனை உங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். மேலும் பெண்களுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கும். உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்றதாக இருந்தால், நீங்கள் சோயாபீன்களை உட்கொள்ளலாம்.