Overfeeding Signs: குழந்தைக்கு அதிகமாக உணவளிப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Overfeeding Signs: குழந்தைக்கு அதிகமாக உணவளிப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?


Signs And Symptoms Of Overfeeding Baby: பிறந்த குழந்தையின் பராமரிப்பு என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்றாகும். அந்த வகையில் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் படி, உணவு முறைகளைச் சரியாகக் கையாள்வது அவசியமாகும். குழந்தைக்கு போதுமான அளவு குறைவாக உணவளிப்பதும், அளவுக்கு அதிகமாக உணவளிப்பதும் ஆரோக்கியமற்றதாகும். இவை உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலுக்கு நன்மை தருபவையாக இருந்தாலும், சில உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தை அழுவதற்கு பசி மட்டுமே காரணம் என தவறாக நினைக்கக் கூடாது. குழந்தை அழ வாயுப்பிரச்சனை, வலி போன்றவையும் காரணமாக இருக்கலாம். இப்போது பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தைக்கு அதிகப்படியான உணவளிப்பதன் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

குழந்தைக்கு அதிகப்படியாக உணவு கொடுப்பதன் அறிகுறிகள்

குழந்தைக்கு பெற்றோர்கள் அதிகப்படியான உணவை அளிப்பதன் மூலம் சில அறிகுறிகள் தென்படும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

  • அதிகப்படியான சிறுநீர் கழித்தல் – குழந்தை வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வதைக் குறிக்கலாம்.
  • எடை அதிகரிப்பு – குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறாக எடை அதிகரிக்கலாம். குழந்தை அதிகளவு பால் உட்கொள்வதே இதற்குக் காரணமாகும்.
  • சில குழந்தைகள் போதுமான அளவு பால் அருந்திய பின்னர், குழந்தை பால் குடிக்காது. இது குழந்தை வயிறு நிரம்பியிருப்பதைக் குறிக்கிறது.
  • அதிகப்படியான பால் குடிக்கும் போது வாயிலிருந்து பாலை வெளியேற்றும் மற்றும் பால் குடிக்கும் போது அழும்.
  • உணவளிக்க விரும்பாதது அதிக பால் உட்கொள்ளுதலைக் குறிப்பதால், இது உணவை ஏற்கனவே நிரம்பியிருப்பதற்கான அறிகுறியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்

குழந்தைகளுக்கு அதிகளவு உணவு கொடுக்கக் கூடாது ஏன்?

பெற்றோர்கள் இந்த அறிகுறிகளைக் கருத்தில் கொள்ளாது, குழந்தைக்கு அதிகளவு உணவளித்துக் கொண்டே இருப்பர். ஆனால், இவை எந்த நன்மையும் தராது. அதே சமயம், இவை நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைக்கு அதிகமாக உணவளித்தால் ஏற்படும் தீமைகளைக் காணலாம்.

  • குழந்தைக்கு பால் அதிகம் கொடுக்கும் போது வாயு அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.
  • பாட்டிலில் பால் ஊட்டப்படும் போது சில நேரங்களில் குழந்தைகள் அதிக காற்றை உள்ளிழுக்கலாம். இது வாயுத் தொல்லையை ஏற்படுத்துகிறது.
  • குழந்தைக்கு அதிகப்படியான பால் உட்கொள்வது குழந்தைக்கு அடிக்கடி குடல் இயக்கத்தைத் தேவைப்படலாம். இது கடைசியில் அவரைப் பலவீனமாக உணர வைக்கும்.
  • அதிகப்படியான உணவு குழந்தைகளின் திடீர் எடையை அதிகப்படுத்தலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

அதிகப்படியான உணவு கொடுப்பதைத் தடுக்க பெற்றோர்களுக்கான குறிப்புகள்

குழந்தைகளுக்கு அதிகளவு உணவு கொடுப்பதைத் தவிர்க்க பெற்றோர்கள் எடுக்க வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

  • போதுமான உணவளித்த பிறகு குழந்தை பால் குடிக்கவில்லை அல்லது உணவை நிராகரிக்கிறது எனில் அதற்கு மேல் குழந்தைக்கு உணவளிக்க வேண்டாம்
  • குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கக் கூடாது. குழந்தை போதுமான அளவு உணவு எடுத்துக் கொள்ளவில்லை எனில், ஏதாவதொரு பிரச்சனை இருக்கலாம். எனவே உடனடியாக குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது.
  • உணவளிக்கும் போது பெரிய அளவிலான பாட்டிலைப் பயன்படுத்தக் கூடாது. அதிகப்படியான உணவைத் தடுக்க சிறிய அல்லது நடுத்தர அளவிலான பாட்டிலைப் பயன்படுத்தலாம்.
  • உணவளிக்கும் நேரத்தை நிர்ணயிப்பது நல்லது. ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரைப்படி உணவளிக்க வேண்டும். இதனுடன் பால் அளவை நிர்ணயிப்பது நல்லது.
  • குழந்தைகளுக்கு அதிகளவு உணவளிப்பது, பெரும்பாலான பெற்றோர்கள் புறக்கணிக்கும் பிரச்சனையாகும். எனினும், குழந்தையின் தேவையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உணவளிப்பது முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Newborn Oil Massage: குழந்தைகளின் உடலை வலுப்படுத்த இந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யுங்க

Disclaimer

குறிச்சொற்கள்