Ghee Moisturizer: ட்ரெண்ட் ஆகி வரும் நெய் மாய்ஸ்சரைசர்.! அப்படி என்ன தான் இருக்கு இதுல..

  • SHARE
  • FOLLOW
Ghee Moisturizer: ட்ரெண்ட் ஆகி வரும் நெய் மாய்ஸ்சரைசர்.! அப்படி என்ன தான் இருக்கு இதுல..


இதில் இருந்து விடுபட ஒரே பொருள் மட்டும் போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நெய் மட்டும் போது.. உங்கள் சருமம் தங்கம் போல் ஜொலிக்கும். நெய்யை கொண்டு  மாய்ஸ்சரைசர் செய்வது எப்படி என்பதையும், இதனால் சருமத்திற்கு என்ன நன்மை இருக்கிறது என்பதையும் இங்கே காண்போம். 

நெய் மாய்ஸ்சரைசர் செய்வது எப்படி? (How To Make Ghee Moisturizer)

ஒரு பெரிய சமமான தட்டு எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு குழி கரண்டி நெய் எடுத்துக்கொள்ளவும். இதில் 3 டீஸ்பூண் அளவு தண்ணீர் சேத்துக்கொள்ளவும். தற்போது அதனை ஒரு குட்டி பாத்திரம் கொண்டு தேய்க்க வேண்டும். இதில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை அகற்றவும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து இந்த முறையை நூறு முறை செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: Mosambi For Face: பார்லர் போகாமல் முகம் பளபளப்பாக சாத்துகுடியை இப்படி பயன்படுத்துங்க!

தற்போது நெய் ஒரு கிரீம் பதத்திற்கு மாரி வரும். நாம் அதை தொட்டு பார்க்கும் போதே நமக்கு ஒரு மாய்ஸ்சரைசர் போல் தோன்றும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதனை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தை கழுவிய பின் பயன்படுத்தவும். இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும். மேலும் உங்கள் சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க செய்யும். 

நெய் மாய்ஸ்சரைசர் நன்மைகள் (Ghee Moisturizer Benefits)

ஈரப்பதமூட்டும் 

வறண்ட சருமத்திற்கு நெய் மாய்ஸ்சரைசர் ஒரு சிறந்த தேர்வாகும். இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. இதனால் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படாது. 

வயதான தோற்றம் நீங்கும் 

நெய் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதால், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உங்கள் சருமம் பாதுகாக்கப்படும். இது முன்கூட்டியே முதுமை தோற்றத்தில் இருந்து உங்களை காக்கும். 

சருமம் ஜொலிக்கும்

உங்கள் சருமம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்றால் நெய் மாய்ஸ்சரைசர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதனை தடவுவது மூலம், உங்கள் சரும பிரச்னைகள் தீருவதுடன், சருமம் தங்கம் போல்  ஜொலிக்கும். 

பின் குறிப்பு 

நெய் மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை இருந்தல், இதனை பயன்படுத்துவதற்கு முன் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். 

Image Source: Freepik

Read Next

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க… மோரை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Disclaimer

குறிச்சொற்கள்