உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிப்புக்குள்ளாக்கி, நம்மை பீதியடையச் செய்ய வைத்த கொரோனா வைரஸ் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதன் தாக்கம் இன்றளவும் முடியாமல் சில இடங்களில் இருந்து வருவதை கேள்விப்பட்டு வருகிறோம். இந்நிலையில், தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் ஐரோப்பிய நாடுகளை பீதியடையச் செய்து வருகிறது இதுவரை, இந்த வைரஸ் ஆனது 5-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் வேகமாக பரவி வருவதால், ஐரோப்பிய சுகாதார அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதல் எவ்வாறு பரவுகிறது மற்றும் இது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். அதே சமயம், வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுகள் எதிர்பாராத நேரங்களில் திடீரென வேகமாகப் பரவுகின்றன. இவை COVID-19 போன்ற ஒரு பெரிய தொற்றுநோயை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சூழலில் ஐரோப்பாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் இப்போது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: கோடைக்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவும் சம்மர் ஃபுட்ஸ் இதோ
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்
இந்த வைரஸ் பரவல் குறித்து indiaherald தளத்தில் குறிப்பிட்டதாவது, இத்தாலியின் லாசியோ பகுதியில் வசிக்கும் ஒரு வயதான பெண் இந்த வைரஸ் தொற்றால் இறந்துள்ளார். மேலும் இது நாட்டில் இந்த வைரஸால் ஏற்பட்ட 10வது மரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை, வெஸ்ட் நைல் வைரஸ் ஐரோப்பாவில் 5 நாடுகளுக்கு பரவியுள்ளது.
லாசியோ பிராந்தியத்தைப் பொறுத்தவரை, இது நான்காவது மேற்கு நைல் வைரஸ் மரணம் என்றும் கூறப்படுகிறது. இவர் சிஸ்டெர்னா டி லத்தினாவைச் சேர்ந்தவர் என்றும், முதலில் வெல்லெட்ரியில் உள்ள சான் பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ரோமுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் எந்த சிகிச்சையும் இல்லாமல் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன?
இது கியூலெக்ஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு நோயாகும். இந்த கொசுக்கள் பாதிக்கப்பட்ட பறவைகளைக் கடிக்கும்போது, வைரஸ் அவற்றுக்குள் நுழைந்து பின்னர் அவை மனிதர்களைக் கடிக்கும்போது தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெஸ்ட் நைல் வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் குறிப்புகள்
பருவகாலம் தொடங்கிய உடனே கொசு பருவமும் வருகிறது. அதிலும், கொசுக்கள் முன்பு வசிக்காத நாட்டின் பகுதிகளில் அதிகளவில் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றன. எனினும், வெளிப்புற இடங்களைச் சுத்தம் செய்வதன் மூலம் கொசு பரவலை கட்டுப்படுத்தலாம். இதில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான சில முறைகளைக் காணலாம்.
தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது
சிறிய அளவு தேங்கி நிற்கும் நீர் கூட கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறக்கூடும். இதனால், கொசுக்கள் முட்டையிடக்கூடிய மறைமுகமான இடங்களை தவறாமல் சரிபார்க்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே மழைக்குப் பிறகு இங்கு தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய எல்லா இடங்களிலும் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நீர் ஆதாரங்களை அகற்றுவது, கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்க உதவும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று... புது வகை வைரஸின் அறிகுறிகள் என்ன?
கொசு விரட்டும் அத்தியாவசிய திரவங்கள்
தாவரத் தேர்வுகள் மட்டும் இந்த கோடையில் கொசுக்களைக் கடிக்காமல் தடுக்காது என்றாலும், கொசுக்களைத் தடுப்பதற்கு சில அறியப்பட்ட வாசனைகளைக் கொண்ட பல்வேறு தாவரங்கள் உதவுகின்றன. அதன் படி, சிட்ரோனெல்லா, சாமந்தி, எலுமிச்சை மற்றும் லாவெண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது கொசுக்களை விரட்டுவதற்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
கொசு விரட்டி பயன்பாடு
இது மிகவும் பயனுள்ள, மலிவான முறையாகும். கொசு விரட்டி ஒரு மின்சார விசிறி ஆகும். இதில் கொசுக்கள் காற்று வீசும் பகுதிகளை விரும்புவதில்லை, எனவே ஒரு பெட்டி விசிறி, ஊசலாடும் விசிறி அல்லது மேல்நிலை வெளிப்புற சீலிங் விசிறியை இயக்குவது கொசுக்களை விலக்கி வைக்க உதவும் மற்றொரு வழியாக அமைகிறது.
இது போன்ற ஏராளமான முறைகளில் கொசுக்களைத் தவிர்ப்பதன் மூலம் வைரஸ் பரவல் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: West Nile Fever: கேரளாவில் பரவும் புது வைரஸ்.! சுகாதாரத்துறை எச்சரிக்கை…
Image Source: Freepik