Sat Sep 12, 2026 | 01:44 AM IST

New Covid Variant: புதிய கொரோனா மாறுபாடு பைரோலா எவ்வளவு ஆபத்து தெரியுமா?

New Covid Variant Pirola Symptoms: இன்றளவும் புதிய வகை கொரோனா மாறுபாடுகள் உருமாறி, உலகளவில் மக்களை அச்சுறுத்து வருகின்றன. கடந்த காலத்தில் கொரோனா குறித்த செய்திகள் அதிகமாக இருப்பினும், இன்றும் அதன் வைரஸ் எவ்வாறு உருமாறுகிறது என்பதை விஞ்ஞானிகளும், சுகாதாரக் கண்காணிப்புக் குழுக்களும் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பைரோலா என குறிப்பிடப்படும் மிகவும் மாறுபாடடைந்த BA.2.86 என்ற வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பைரோலா பரவல்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை உலகளவில் 21 பேர் மட்டுமே பைரோலாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், 30-க்கும் அதிகமான பரவலால், இது கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது முக்கியமான ஸ்பைக் புரதத்தில் உள்ளது. ஸ்பைக் புரதம் என்பது உடலில் வைரஸ் நுழைவதற்கு மனித உயிரணுக்களில் உள்ள ஏற்பிகளுடன் இணைக்கும் புரதம் ஆகும்.

நோயின் பரவல் மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து இந்த மாறுபாடுகளின் தாக்கத்தை சுகாதார முகமைகள் கண்டறியும் போது, தற்போது கோவிட்-19 பாதிப்புகள் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Covid Variant Ba 2.86: புதிய வகை கொரோனா மாறுபாடு பிஏ.2.86 அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்

பைரோலா பற்றிய தகவல்

பைரோலாவானது அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. எனினும், இது அதிக நபர்களிடம் கண்டறியப்படவில்லை. இருப்பினும், இந்த மாறுபாடு வேகமாகப் பரவுமா அல்லது கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பதைத் தீர்மானிப்பதற்கான எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இவை மிகவும் பிறழ்ந்த மாறுபாடுகளுடன் காணப்படுகிறது. இவை உண்மையில் பரவுவதில்லை. ஆனால், ஒரே இடத்தில் சமரசம் செய்யப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களில் இந்த பைரோலா கண்டறியப்படுகிறது.

பைரோலா குறித்த உண்மைகள்

பைரோலா ஆனது பிஏ.2.86 என்பது ஒமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு ஆகும். இந்த வகை மாறுபாடு ஒமிக்ரானின் XBB மாறுபாட்டிலிருந்து பெறப்பட்டதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Eris COVID Variant: தீவிரமாய் பரவும் கோவிட் EG.5 வைரஸ்; அறிகுறிகள் என்ன தெரியுமா?

கொரோனாவில் முந்தைய மாறுபாட்டினைப் பொறுத்த வரை, ஏற்கனவே வேறு சில மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து குறைவாக இருந்துள்ளது. ஆனால் இந்த புதிய வகை பைரோலா மாறுபாடு முன்னதாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பின், நோய் எதிர்ப்பு சக்தியை மந்தாக்கி, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த பைரோலா மாறுபாட்டின் மீது, கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தை விஞ்ஞானிகள் இன்னும் துல்லியமானத் தகவல்களைப் பெறவில்லை.

பைரோலா, எரிஸ் ஆகிய இரண்டும் நீர்த்துளிகள் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் பைரோலாவால் சருமத்தில் பிரச்சனைகள், வயிறு தொடர்பான பிரச்சனைகள், காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Covid Variant Pirola: பீதியை கிளப்பும் கொரோனாவின் புதிய மாறுபாடு பைரோலா, இதன் அறிகுறிகள் என்ன?

Image Source: Freepik

Read Next

Covid Variant Pirola: பீதியை கிளப்பும் கொரோனாவின் புதிய மாறுபாடு பைரோலா, இதன் அறிகுறிகள் என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content