Eris COVID Variant: தீவிரமாய் பரவும் கோவிட் EG.5 வைரஸ்; அறிகுறிகள் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Eris COVID Variant: தீவிரமாய் பரவும் கோவிட் EG.5 வைரஸ்; அறிகுறிகள் என்ன தெரியுமா?


New COVID Variant Eris : கோவிட்-19 EG.5.1 இன் புதிய மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் வேகமாகப் பரவிய இந்த புதிய வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிழும் அதிகமாக பரவத்துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ERIS சீனா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட உலகம் முழுவதும் 51 நாடுகளில் இதுவரை பரவியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவல் படி, கொரோனா பரிசோதனையின் போது, கோவிட் அறிகுறிகள் காணப்படும் நெகட்டீவ் ரிசல்டை பெற்றுள்ளனர்.

அதவாது, ஒருவருக்கு கோவிட் நெகட்டிவ் ஆக இருந்த பிறகும் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. சோதனையின் போது நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு கோவிட் அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டதால் அவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யும் போது, அந்த நபருக்கு கோவிட் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இது கொரோனா இரண்டாம் அலையை போல வேகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

எரிஸின் பரிமாற்ற வீதம்

ஓமிக்ரான் மாறுபாட்டின் மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில், அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் EG.5 குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது. GISAID-க்கு சமர்ப்பிக்கப்பட்ட 7,354 வரிசைகளில், சீனா அதிக எண்ணிக்கையிலான EG.5 தொற்றுக்களை சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, கொரியா, ஜப்பான் மற்றும் கனடா.

எரிஸின் அறிகுறிகள் என்ன?

உலக சுகாதார அமைப்பு (WHO) EG.5 தொற்று குறித்த அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. EG.5.1 தொற்று பாதிக்கப்பட்டால், தொண்டை புண், சளி, இருமல், சுவை மற்றும் வாசனை உணர்வு இழப்பு, சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, மூக்கு அடைத்தல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம் : Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

கடந்த சில நாட்களாக, புதிய கோவிட் மாறுபாடு வைரஸ் தொற்று குறித்த தகவல் மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பும் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Image Credit: freepik

Read Next

Banana Side Effects: காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Disclaimer