Papaya Skin Benefits In Tamil: குளிர் காலம், கோடைக்காலம் என எல்லாக் காலங்களிலும், ஆண்டு முழுவதும் கிடைக்கப் பெறும் பழம் பப்பாளிப்பழம் ஆகும். இது உடலுக்குத் தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஊட்டச்சத்துமிக்க பழமாகும். இதில் அதிக அளவிலான வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ, சி ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தைப் பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. பப்பாளிப்பழத்தில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் இன்னும் சில தாவர கலவைகள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இப்போது பப்பாளி சாறு தரும் பல்வேறு விதமான தோல் பராமரிப்புகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
சரும பராமரிப்புக்கு பப்பாளிச் சாறு எப்படி உதவுகிறது?
பொதுவாக சருமத்தை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் பழங்களில் பப்பாளிப்பழமும் ஒன்றாகும். சரும பராமரிப்பிற்கு பப்பாளிச் சாறு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
சரும ஈரப்பதத்திற்கு
பப்பாளிப்பழத்தில் என்சைம்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இயற்கையாகவே சருமத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவி வர சருமப் பொலிவு மற்றும் மென்மையைப் பெறலாம்.
முதுமை எதிர்ப்பு
பப்பாளியில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், கரோட்டினாய்டுகளும் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இதில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்றவை சருமத்தில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்கிறது. மேலும், இது சருமத்தை இறுக்கமாக்கி, சுருக்கங்களை மறையச் செய்கிறது. மேலும், பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது ஒழுங்கற்ற நிறமியைக் குறைப்பதுடன், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது.
இயற்கை சுத்தப்படுத்தியாக
பப்பாளியில் உள்ள பப்பேன், சருமத்தில் நிறைந்திருக்கும் பெரிய புரதங்களை மெதுவாக உடைத்து ஜீரணிக்க உதவுகிறது. மேலும், இது சேதமடைந்த செல்களை அகற்றும் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?
கரும்புள்ளிகள் குறைய
இயற்கையான மூலப்பொருளான பப்பாளி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக கோடைக் காலத்தில் சருமம் வறண்டு போவதுடன், வடுக்கள், பருக்கள் போன்றவை ஏற்படும். இந்த பப்பாளிச் சாறு ஆனது, ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை கரும்புள்ளிகளின் தோற்றத்தைப் போக்க உதவுகிறது.
தோல் நோய்களைக் குணப்படுத்த
பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துகள், தீக்காயங்கள், வடுக்கள் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், தோல் தடிப்பு, அழற்சி உள்ளிட்டவற்றிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. தோலின் ஏற்படும் அரிப்புகளைத் தடுக்க, பப்பாளிக் கூழை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, விரைவில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
முகப்பருக்கள் கட்டுப்பாடு
கோடை காலம் வந்து விட்டால் அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று முகப்பருக்கள் ஆகும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக பப்பாளி உள்ளது. பப்பாளியில் உள்ள பப்பெய்ன் என்ற சரும எரிச்சலைத் தணிக்கும் பண்புகளே காரணம். மேலும், இதில் எக்ஸ்ஃபோலியேட்டிங் என்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை இறந்த செல்களை நீக்கி, சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது.
இவ்வாறு ஏராளமான வழிகளில் பப்பாளிப்பழம் மற்றும் அதன் சாறு சரும பாதுகாப்பிற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
Image Source: Freepik