குழந்தைகளை தொடர்ந்து புகழ்வது நல்லதா? பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

  • SHARE
  • FOLLOW
குழந்தைகளை தொடர்ந்து புகழ்வது நல்லதா? பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


குழந்தைகளை தொடர்ந்து புகழ்வது நல்லதா?

குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் மனதை நல்ல மனநிலையில் வைத்திருக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், ஊக்கப்படுத்தவும் பல நேரங்களை நாம் அவர்களை பாராட்டுகிறோம். இதுபோன்ற பாராட்டுகளால் பெரும்பாலான குழந்தைகளிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சில சமயங்களில் குழந்தைகளை அதிகமாக புகழ்வது தவறாக முடியலாம். அதிகப்படியான பாராட்டுக்களால் குழந்தைகள் அதீத நம்பிக்கையுடன் இருப்பார்கள், இதனால் பல தவறுகள் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால், குழந்தைகள் பெற்றோர்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாராட்டும்போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குழந்தையைப் பாராட்டவே இல்லை என்பதும் அதிகமாகப் புகழ்வது என்பதும் தொடர்ந்து நடக்கவேக் கூடாதவை. இதை சரிசெய்வதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

குழந்தைகள் நலனுக்கு பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குழந்தைகளைப் புகழ்ந்து பேசும் போது, ​​குழந்தையின் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பதையும், அதீத தன்னம்பிக்கை இருக்கக் கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இதற்கான சிறந்த வழி, எப்போதும் செய்யும் வேலையை பாராட்ட வேண்டுமே தவிர, வேலை செய்பவர் அல்ல.

உதாரணமாக, உங்கள் குழந்தை வீட்டைச் சுத்தம் செய்துவிட்டதாக வைத்துக்கொள்வோம், அதை அவர்கள் சரியாக செய்தபின் அந்த வேலையை தான் நீங்கள் பாராட்ட வேண்டுமே தவிர அவர்களை மிக அதிகமாக புகழக்கூடாது.

நல்லதை சொல்லிக் கொடுக்க வேண்டும்

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் நல்லவர், மிகவும் அமைதியானவர், மிகவும் அழகானவர், மிகவும் நேர்மையானவர், மிகவும் படிப்பாளிகள் என்று புகழ்கிறார்கள். இவை காலத்துக்கும் வயதுக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். இப்படி செய்கையில் அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். பிறர் முன்னாள் உங்கள் குழந்தையை அதீதமாக புகழ வேண்டாம். அதீதமாக அவர்கள் குணாதியங்களையும் குறிப்பிட வேண்டாம்.

பொய்யான புகழ்ச்சி வேண்டாம்

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் முன்னிலையில் பொய்யாக புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள். குழந்தையின் மன உறுதியை அதிகரிக்க, அவர்கள் அதிகப்படியான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டுகளை வழங்கத் தொடங்குகிறார்கள். இந்த பழக்கம் குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், குழந்தைகளின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் குறைகிறது.

ஒப்பிட்டு பாராட்ட வேண்டாம்

குழந்தைகளை ஒப்பிட்டுப் பாராட்டக்கூடாது. எதிரில் இருக்கும் குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் புகழக் கூடாது. இந்த வகையான பாராட்டு குழந்தையின் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உங்கள் குழந்தையை வேறு எந்த குழந்தையுடனும் ஒப்பிடாதீர்கள். பொதுவாகவே யாரையும், யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

கற்றல் திறனை பாராட்டுங்கள்

குழந்தைகள் சில விஷயங்களைச் செய்வதன் மூலம் நல்லவைகளை கற்றுக் கொள்கிறார்கள். அப்படி அவர்கள் தாங்களாகவே விருப்பத்தோடு கற்றுக் கொள்ளும் விஷயத்தை பாராட்டுங்கள். அவர்களை தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்குவிக்கவும். இது குழந்தையின் கற்றல் திறனை மேம்படுத்தும். இப்படி செய்வது அவர்களின் எதிர்காலத்துக்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Autism Childrens Therapy: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை முறைகள்

Disclaimer

குறிச்சொற்கள்