Waking up tired: தூங்கி எழுதும் சோர்வாக உணர்கிறீர்களா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Waking up tired: தூங்கி எழுதும் சோர்வாக உணர்கிறீர்களா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்


Feeling Tired After Waking up: சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வது மிகவும் பொதுவானது. அதிகமாக வேலைப்பளு இருக்கும் போது, மறுநாள் காலையில் சோர்வாக உணர்வது இயல்பானது. ஆனால், சிலர் தினமும் காலையில் தூங்கி எழுந்தும் பலவீனமாகவும் உணர்வார்கள். இதை டிஸ்டோனியா என்று மருத்துவ ரீதியில் கூறுவார்கள்.

டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே சோர்வாக உணர்வார்கள். நீங்களும் காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்தால், இதை புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், இந்த அறிகுறி கடுமையான நோய்களாகவும் இருக்கலாம். காலையில் எழுந்தவுடனே சோர்வாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

சோர்வாக இருப்பது இந்த நோய்களின் அறிகுறியாகும்

தூக்கக் கோளாறு

உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை இருந்தால், காலையில் எழுந்ததும் சோர்வாக உணரலாம். பல வகையான தூக்கக் கோளாறுகள் உள்ளன. தூக்கக் கோளாறு காரணமாக, தூக்கம் முழுமையடையாது, இதன் காரணமாக சோர்வு ஏற்படலாம். தூக்கத்தில் மூச்சுத்திணறல் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, இரவில் சரிவர தூங்கவில்லை என்றால், ஒருமுறை மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவும் உதவலாம் : உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

இதய நோய்கள்

காலையில் எழுந்தவுடன் சோர்வாக உணர்வது இதய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்கு இதய நோய் இருந்தால், நீங்கள் காலையில் எழுந்திருப்பது கடினமாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அல்லது வேறு ஏதேனும் இதய நோய் சோர்வை ஏற்படுத்தும். எனவே, தினமும் காலையில் நீங்கள் சோர்வாக உணர்ந்தால், நிச்சயமாக உங்கள் இதயத்தை பரிசோதிக்கவும்.

நாள்பட்ட சோர்வு

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (chronic fatigue syndrome) எப்பவும் சோர்வாக உணர ஒரு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக சோர்வாக உணர்ந்தால், ​​அது நாள்பட்ட சோர்வு ஆகும். இது ஒரு தீவிர நிலையாக இருக்கலாம். இந்த அறிகுறியை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

மன அழுத்தம்

மனச்சோர்வுக்கும் உடல் சோர்வுக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​​​​அவருக்கு இரவில் தூங்குவது கடினமாகும். இந்நிலையில், அவருக்கு போதுமான தூக்கம் வரவில்லை, இதன் காரணமாக அவர் காலையில் எழுந்ததும் சோர்வாக உணரலாம். நீங்கள் மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் வாழ்ந்தால், அதைத் தவிர்க்க தினமும் காலையில் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும்.

தைராய்டு கோளாறு

தைராய்டு நோயாளி காலை எழுந்தவுடன் சோர்வாக உணரலாம். குறிப்பாக, ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் சோர்வை சந்திக்க நேரிடும். தைராய்டு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உடலில் சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும்.

Pic Courtesy: Freepik

Read Next

Dengue Symptoms: பரவி வரும் டெங்கு., இந்த அறிகுறிகளை புறணக்கணிக்காதீர்கள்!

Disclaimer