How to make besan flour at home: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு நம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருள்களை கடைகளிலேயே வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும், அனைத்து சமையல் பொருள்களுக்கும் உகந்ததாக இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையில் இல்லை. நாம் பெரும்பாலும் கடைகளில் வாங்கக்கூடிய பொருள்களில் கலப்படமாக இருக்கலாம். அவ்வாறு நம் உணவில் சேர்க்கப்படும் கடலை மாவை பெரும்பாலும் நாம் கடையிலிருந்தே வாங்கி பயன்படுத்துகிறோம்.
நாம் கடைகளில் வாங்கப்படும் கடலை மாவு அரைத்த கடலை பருப்பு அல்ல. இது பெரும்பாலும் தெரிந்தே உட்கொள்ளாத மலிவான, தரம் குறைந்த பொருட்களுடன் கலக்கப்படுகிறது. இது போன்ற எந்த வித கலப்படமும் இல்லாத வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதுடன், பாதுகாப்பையும் கூட்டுகிறது. அதன் படி, கடலை பருப்பில் காணப்படும் சில பொதுவான கலப்படங்கள் குறித்தும், கடலை பருப்பை எளிதான முறையில் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Flour For Diabetics: கோதுமை மாவை விட இந்த மாவில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது!
வணிக கடலை மாவின் விளைவுகள்
அஞ்சலி முகர்ஜி அவர்களின் கூற்றுப்படி, கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மாவு வெறும் அரைத்த கடலை பருப்பு கொண்டு மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. இதில் பெரும்பாலும் நமக்குத் தெரிந்தே உட்கொள்ளாத மலிவான, தரம் குறைந்த பொருட்களும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மாவில் காணப்படும் சில பொதுவான கலப்படங்களைக் காணலாம்.
கேசரி பருப்பு
கேசரி பருப்பு உட்கொள்ளும் போது காலப்போக்கில் நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதத்துடன் தொடர்புடையதாகும் என்பதால் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஸ்டார்ச் பொடிகள்
இது உடல் எடையை அதிகரிக்க சேர்க்கப்படுவதாகும். ஆனால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனால், உணவு உடலுக்குக் குறைவான ஊட்டமளிக்கிறது.
மெட்டானில் மஞ்சள் (செயற்கை சாயம்)
இது முக்கிய உடலுறுப்புகளான குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த, அனுமதிக்கப்படாத உணவு நிறமாகும்.
மக்காச்சோள மாவு & மஞ்சள் பட்டாணி மாவு
கடலை மாவில் இந்த மாவைச் சேர்ப்பது அதன் அளவை மொத்தமாக அதிகரிக்கவும், அதன் ஊட்டச்சத்து மதிப்பை நீர்த்துப்போகவும் செய்கிறது. மேலும் இது அதன் அமைப்பை மாற்றவும் பயன்படுகிறது.
கடலை பருப்பு வெறும் கடலை பருப்பாக மட்டுமல்லாமல், இந்த கலப்படப் பொருட்களின் கலவையாகவும் அமைகிறது. இது அதன் புரத உள்ளடக்கத்தைக் குறைப்பதுடன், ஊட்டச்சத்து தரத்தையும் குறைக்கிறது. மேலும் இது உடலில் தேவையற்ற நச்சுக்களை சேர்க்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: மக்களே! இந்த மாவை மைதாவிற்கு பதிலாக பயன்படுத்தினால்… ஆரோக்கியம் சும்மா அள்ளும்!
கடலை மாவு தயார் செய்யும் முறை
நம் வீட்டிலேயே எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் கடலை மாவைத் தயார் செய்யலாம். இதில் அதற்கான குறிப்புகளைக் காண்போம்.
தேவையானவை
கடலை மாவு செய்வதற்கு வறுத்த கடலைப்பருப்பு மட்டுமே தேவைப்படுகிறது.
கடலை மாவு செய்வது எப்படி
- 100% தூய்மையான வறுத்த கடலைப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதை சிறிது சிறிதாக மணம் வரும் வரை 5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.
- பிறகு இதை அரைப்பதற்கு முன்பாக முழுமையாக குளிர்விக்க விடலாம்.
- அதன் பின்னர் அதிவேக மிக்சரைப் பயன்படுத்தி நன்றாகப் பொடியாக கலக்க வேண்டும்.
- பின் இந்தக் கலவையை சல்லடை செய்வதன் மூலம் மிகவும் மென்மையான அமைப்பைப் பெறலாம்.
- இதை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் காற்று புகாத கொள்கலனில் சேமித்துக் கொள்ளலாம்.
வணிக கடலைப் பருப்பு வசதியாக இருப்பதாக இருப்பினும், இது ஆரோக்கியம் சமரசத்திற்கு மதிப்புக்குரியது அல்ல. தூய்மையைத் தேர்வு செய்து, வீட்டிலேயே தயார் செய்வதன் மூலம் உண்மையான, பதப்படுத்தப்படாத உணவைக் கொண்டு உடலைப் பாதுகாக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் ஆரோக்கியமா இருக்க விரும்பினா, கோதுமையை விட்டுத் தள்ளிட்டு இந்த மாவுல சப்பாத்தி பண்ணுங்க..!
Image Source: Freepik