Thu Oct 29, 2026 | 11:53 AM IST

இந்த ஸ்கின் பிரச்சனைகள் இருக்கா? நிபுணர் சொன்ன இந்த ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்க

Natural solutions for the most common skin problems: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு சரும பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த சரும பிரச்சனைகளைத் தவிர்க்க ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த ஸ்கின் பிரச்சனைகள் இருக்கா? நிபுணர் சொன்ன இந்த ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்கஇந்த ஸ்கின் பிரச்சனைகள் இருக்கா? நிபுணர் சொன்ன இந்த ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்க

Top skin issues and how to treat them naturally: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். காலநிலை மாற்றங்களின் காரணமாகவும் சரும ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படலாம். இதில் முகப்பரு, நிறமி, வறட்சி மற்றும் பிடிவாதமான கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சினைகள் பலருக்கு பொதுவான கவலையாக அமைகிறது.

இதற்கு சிலர் தீர்வு பெறும் வகையில், விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளக்கூடிய சில உணவுகளும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் மூலம் பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரச்சனையற்ற சருமத்தை அடைவதில் உள் ஆரோக்கியம் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க சருமத்தை பாதிக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல்.. நிபுணர் சொன்னது

நிபுணரின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது வீடியோவில், உணவு மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு இடையிலான தொடர்பை உடைத்து, ஹார்மோன் முகப்பரு முதல் மந்தநிலை வரை அனைத்திற்கும் இயற்கையான, உணவு சார்ந்த தீர்வுகளைக் குரிப்பிட்டுள்ளார். அதன் படி, ஸ்பியர்மிண்ட், நெல்லிக்காய் மற்றும் ப்ளூபெர்ரி போன்ற எளிய, அன்றாடப் பொருட்களுடன் சருமப் பிரச்சனைகளுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

பொதுவான சரும பிரச்சனைகள் மற்றும் அதன் இயற்கையான தீர்வுகள்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் சருமத்தில் ஏற்படும் சில பொதுவான பிரச்சனைகள் குறித்தும், அதற்கான இயற்கை தீர்வுகள் குரித்தும் குறிப்பிட்டுள்ளார்.

முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம்

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்புக்குக் காரணமாக, பெண்களுக்கு முகப்பரு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், அன்றாட வழக்கத்தில் ஸ்பியர்மின்ட் புதினா இலைகளைச் சேர்ப்பது நன்மை பயக்கும். ஏனெனில், இதில் இயற்கையாகவே ஆண்ட்ரோஜெனிக் எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க உதவுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு கப் ஸ்பியர்புதினா தேநீர் குடிப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம்

இது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதற்கு மென்மையான தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இவை பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சைட்டோகினின்களின் இயற்கையான மூலமாகும். இது இளமையான, குண்டான சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் இது லேசான அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது.

நிறமி பிரச்சனைகள்

கொலாஜன் பற்றாக்குறையால் சருமத்தில் ஏற்படும் நிறமி பிரச்சனைகளிலிருந்து விடுபட ஆம்லா ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆம்லா ஆனது ஆரஞ்சுகளை விட 20 மடங்கு அதிக வைட்டமின் சி கொண்டதாகும். இது மெலனின் உற்பத்தியைக் குறைத்து கொலாஜனை அதிகரிக்கிறது. இவை சருமத்தை சூரிய சேதம், மாசுபாடு மற்றும் மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா? மழைக்காலத்தில் உங்க சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!

கரும்புள்ளிகள்

சிற்றுண்டிகளில் சிறந்த கூடுதல் தேர்வாக ஜாமுன் அமைகிறது. இதில் எலாஜிக் அமிலம் மற்றும் அந்தோசயனின்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை அதிகப்படியான மெலனின் குறைக்கவும், பிடிவாதமான திட்டுகளை ஒளிரச் செய்யவும் உதவுகிறது. கூடுதலாக, இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்றவை சருமத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

மந்தநிலை

ஒரு கைப்பிடி அவுரிநெல்லிகளை சாப்பிடுவது சருமத்தின் மந்தநிலையைப் போக்க உதவுகிறது. இவை குர்செடின் மற்றும் அந்தோசயனின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. மேலும் இது சருமத்திற்கு தெளிவான, சீரான தொனியைத் தருகிறது.

சருமப் பிரச்சினைகள்

உணவில் மாதுளையைச் சேர்ப்பது கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் புனிகலஜின்கள், வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும் இது ஹார்மோன் வெடிப்புகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தோலில் தெரியும் கல்லீரல் பாதிப்பு.. ஆரம்ப அறிகுறிகள் இங்கே..

Image Source: Freepik

Read Next

→ கடலை மாவு பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.