Flaxseed water: who should stay away from it: அன்றாட வாழ்வில் காய்கறிகள், பழங்கள், பானங்களுடன், நட்ஸ், விதைகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். விதைகளைப் பொறுத்த வரை ஏராளமான வகைகள் உள்ளன. இந்த வரிசையில் ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்பர்ஃபுட்டாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் இதில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
ஆளி விதைகளை உட்கொள்வது உடலை சூடாக வைத்திருப்பது, மாதவிடாய்களை சீராக வைத்திருப்பது மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது போன்ற பல வழிகளில் நன்மை பயக்கும். மேலும் இது பல வழிகளில் உட்கொள்ளப்படுகிறது. சிலர் இவற்றை ஸ்மூத்திகள், சாலடுகள் அல்லது பழங்களுடன் சாப்பிடுகின்றனர். அதே நேரத்தில் பலர் ஆளி விதை தண்ணீரை குடிக்கின்றனர். ஆனால், ஆளி விதை நீர் உட்கொள்வது எல்லோருக்கும் நன்மை பயக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?.
ஆம். உண்மையில், ஆளி விதையை உட்கொள்வது பலருக்கும் நுகர்வு பிரச்சனைகளை உண்டாக்கலாம். இதில் யார் ஆளி விதை தண்ணீரை குடிக்கக்கூடாது என்பது குறித்து ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க ஆளி விதைகள் உதவுமா? கரு முட்டையின் தரத்தை தரத்தை அதிகரிக்க டிப்ஸ்!
ஆளி விதை நீரை யார் குடிக்கக் கூடாது?
செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதை நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் இதை குடிக்கக்கூடாது. ஆளி விதை நீரில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் IBS போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, மெதுவாக செரிமானம் அல்லது வயிற்று வலி உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதை நீரை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளது. இது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை அதிகரிக்கிறது. மேலும், PCOS, PCOD மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
அதிக வெப்பத்தை உணருதல்
அதிகமாக வியர்த்து, சூடாக உணருபவர்கள் ஆளி விதை நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதன் நுகர்வு உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. மேலும் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது அதிக உடல் வெப்பத்தை உருவாக்கலாம். இதன் காரணமாக, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள், தோல் ஒவ்வாமை மற்றும் தலைச்சுற்றல் அல்லது வாந்தி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பித்த தோஷம்
பித்த தன்மை உள்ளவர்கள் ஆளி விதை நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே, இதைக் குடிக்க விரும்பினால் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆளி விதையின் தன்மை மிகவும் சூடாக இருக்கும். இந்த தண்ணீரைக் குடிப்பதால் உடலில் பித்த சமநிலையின்மை ஏற்படுகிறது. மேலும் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Drinks: வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவும்.. சந்தேகமே வேண்டாம்.. முடி சூப்பரா வளரும்..
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் ஆளி விதை நீர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஆளி விதை நீரில் பல செயலில் உள்ள சேர்மங்கள் உள்ளது. இந்த சேர்மங்கள் கர்ப்பம் மற்றும் பாலூட்டலின் போது ஹார்மோன்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இந்நிலையில் ஆளி விதை நீரைக் குடிக்காமல் இருப்பது நல்லது.
பிற உடல்நலப் பிரச்சினைகள்
இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதை நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த விதை இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. எனவே இரத்தப்போக்கு ஏற்பட்டால் இந்த நீரைக் குடித்தால், இது இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து இரத்தப்போக்கை அதிகரிக்கிறது. மேலும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆளி விதை நீரைக் குடிக்கக்கூடாது. மேலும் இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருந்தாலும் இதைத் தவிர்க்க வேண்டும். நீரிழிவு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதை உட்கொள்ள வேண்டும்.
முடிவுரை
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆளி விதை நீரைக் குடிப்பது பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, வெறும் வயிற்றில் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பத்தை உணருபவர்கள் அல்லது செரிமான அமைப்பு மோசமாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், ஹார்மோன் சமநிலையின்மை உள்ள பித்த இயல்பு உள்ளவர்கள் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது போன்ற நிலையில் இந்த நீர் நன்மைக்கு பதிலாக உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஆளி விதை நீர் குடித்தால்.. இந்த பிரச்சனைகள் தீரும்..
Image Source: Freepik