$
International Panic Day 2024: சர்வதேச பீதி தினம் என்பது ஒரு வழக்கத்திற்கு மாறான கொண்டாட்டமாகும், இது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும், வாழ்க்கையின் குழப்பத்தைத் தழுவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18 அன்று வரும் இந்த நாள், மக்கள் தங்கள் கவலையை மறக்கவும், பீதியின் பிடியில் இருந்து வெளியேறவும் ஊக்குவிக்கிறது. இந்த தனித்துவமான நாளைப் பற்றிய தீம், வரலாறு, முக்கியத்துவம் குறித்து இங்கே விரிவாக காண்போம்.

சர்வதேச பீதி தினத்தின் வரலாறு (International Panic Day Histoy)
சர்வதேச பீதி தினத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. இருப்பினும், 17 ஆம் நூற்றாண்டில், ராபர்ட் பர்டன் தனது புத்தகமான 'தி அனாடமி ஆஃப் மெலன்கோலி' இல் பீதியை விவரித்துள்ளார். மேலும், உளவியல் மருத்துவத்தின் வரலாற்றில் முதல் பீதி தாக்குதல்கள் 1849 ஆம் ஆண்டில் ஒட்டோமர் டோம்ரிச் என்பவரால் அறிவிக்கப்பட்டது. வாழ்க்கை எவ்வளவு மன அழுத்தமாக மாறியுள்ளது மற்றும் அதைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக பல நாடுகளில் சர்வதேச பீதி தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச பீதி தினத்தின் கருப்பொருள் (International Panic Day Theme)
சர்வதேச பீதி தினத்தின் கருப்பொருள் "குழப்பத்தைத் தழுவுங்கள்" என்பது தான். இந்த ஆண்டு தீம் வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்கள் என்பதை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. குழப்பத்தைத் தழுவுவதன் மூலம், நாம் பீதியை நேர்மறையாக மாற்றலாம் மற்றும் கணிக்க முடியாத தருணங்களில் மகிழ்ச்சியைக் காணலாம்.

சர்வதேச பீதி தினத்தின் முக்கியத்துவம் (International Panic Day Significance)
பீதிக் கோளாறு என்பது ஒரு மனநலப் பிரச்னை. இதனை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானது. சர்வதேச பீதி தினம் என்பது அமைதியாக உட்கார்ந்து, கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் பீதி தாக்குதல்களைத் தடுக்க கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாள். சர்வதேச பீதி தினம் என்பது மக்கள் தங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுடன் தங்கள் கவலைப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கும், தேவைப்படும் போதெல்லாம் உதவி பெறுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
Image Source: Freepik