Piles-ல் இருந்து நிவாரணம் பெற மாதுளை தோல் உதவுமா.?

  • SHARE
  • FOLLOW
Piles-ல் இருந்து நிவாரணம் பெற மாதுளை தோல் உதவுமா.?


பைல்ஸ், மிகவும் வேதனையான ஒரு நோய். சிலர் தங்களுக்கு இந்த பிரச்னை இருந்தால், இது குறித்து பேசவே வெட்கப்படுவார்கள். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடுமையான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பைல்ஸ் பிரச்சனை தீவிரமடைந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

இத்தகைய சூழ்நிலையில், பைல்ஸ் வலி மற்றும் பிரச்னையைத் தவிர்க்க, மோர் மற்றும் மாதுளை தோலைக் கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் பானத்தை முயற்சிக்கவும். 

பைல்ஸுக்கான வீட்டு வைத்தியம் (Piles Remedies)

தேவையான பொருட்கள்

* மாதுளை தோல் பொடி - 1 தேக்கரண்டி 

* வீட்டில் தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் - 1 கிளாஸ்

இதையும் படிங்க: Intestinal Blockage: மலச்சிக்கல், வாயு பிரச்சனையை அலட்சியப்படுத்த வேணாம்.. உஷார்!

செய்முறை

* வீட்டில் தயிரை உறைய வைத்து அதன் வெண்ணெயைப் பிரித்தெடுத்து மோர் தயார் செய்யவும். 

* அதன் பிறகு, மாதுளை தோலை மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி தயார் செய்யவும். 

* இப்போது இந்த பொடியை மோரில் கலந்து அரை மணி நேரம் கழித்து குடிக்கவும். 

பைல்ஸ் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம் செரிமான பிரச்னை தான். மோர் உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்னையை நீக்குகிறது. இது பைல்ஸ் பிரச்னையிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த பானத்தில் இருக்கும் மாதுளை தோல், பைல்ஸ் நேரத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. 

பைல்ஸ்-ஐ குணப்படுத்த, இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை, மதிய உணவுக்குப் பிறகு குடிக்க வேண்டும். ஆனால் மாதுளைப் பொடியை வேறு எந்த வடிவத்திலும் எடுத்துக்கொள்வதால் பைல்ஸ்-ல் எந்த சிறப்புப் பலனும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அதை மோர் கலந்து குடியுங்கள். 

Image Source: Freepik

Read Next

Periods Back Pain: மாதவிடாய் காலத்தில் அதிக முதுகுவலியா.? இப்படி செய்யுங்க…

Disclaimer

குறிச்சொற்கள்