முடி உதிர்தல் என்பது பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பெரிய பிரச்சனை. முடியின் ஆரோக்கியம் சரியில்லாததே இதற்குக் காரணம். இது பெரும்பாலும் சில ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படுகிறது. கூந்தல் பிரச்சனைகளுக்கு புரதச்சத்துக் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. கொத்து, கொத்தாக முடி கொட்டுவதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், புரதச்சத்து நிறைந்தை உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமின்றி, அவற்றை ஹேர் பேக்காகவும் பயன்படுத்துவது நல்லது.
புரதம் அப்படிப்பட்ட ஒன்று. முட்டை புரதத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதை உங்கள் தலைமுடிக்கு ஹேர் பேக்காக பயன்படுத்தவும் நல்லது.
புரதச்சத்து நிறைந்த இந்த உணவைச் சாப்பிட்டு, ஹேர் பேக்காகப் பயன்படுத்தினால், உங்கள் கூந்தலுக்கு நன்மை கிடைக்கும். முடி வளர்ச்சிக்கு உதவும் புரோட்டீன் பேக் தயாரிப்பதற்கான இரண்டு வழிகள் இங்கே உள்ளன.
இதற்கு உங்களுக்கு தேவையானது ஒரு முட்டை. மற்றும் தயிர் வேண்டும். முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டு ஹேர் பேக்காக பயன்படுத்துவது நல்லது. உங்கள் தலைமுடிக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த ஹேர் பேக்குகளில் ஒன்று முட்டை. தயிர் முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க இது நல்லது. முட்டை மற்றும் தயிர் கலந்து தலையில் தடவுவது சிறந்தது.
இந்த ஹேர் பேக்கை தயாரிக்க நமக்கு முட்டை, அலோ வேரா ஜெல், வைட்டமின் ஈ மற்றும் தேங்காய் எண்ணெய் தேவைப்படும்.
இதையும் படிங்க: அளவுக்கு அதிகமா முடி உதிருதா? காரணங்கள் இதுவாக கூட இருக்கலாம்!
முட்டை:
முட்டையில் உள்ள புரதம், முடி இழைகளை பலப்படுத்துகிறது மற்றும் அவை உடைந்து போவதை குறைக்கிறது. இதிலுள்ள பயோட்டின், வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, மற்றும் ஃபோலேட் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முட்டையில் உள்ள லெசித்தின் என்ற சத்து, முடியை ஈரப்பதாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் ஈரப்பதத்தை நிரப்பி முடியை பளபளப்பாக மாற்றுகிறது.
அலோவேரா ஜெல்:
முட்டைக்கு அடுத்தப்படியாக கற்றாழை கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஈ உட்பட பல சத்துக்கள் உள்ளன. கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கவும் முடி நன்கு வளரவும் நல்லது. பொடுகு மற்றும் வறண்ட கூந்தல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். கற்றாழை இயற்கையான ஹேர் கண்டிஷனர்களில் ஒன்றாகும்.
வைட்டமின் ஈ:
வைட்டமின் ஈ முடி வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாகும். இது சருமத்தில் இருந்தால், அது சுருக்கங்களைத் தடுக்கும் மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இதைச் செய்கிறது. நரை முடியைத் தடுக்க வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது. இதில் உள்ள உணவுகளை சாப்பிட்டு, இந்த எண்ணெயை நேரடியாக கூந்தலில் தடவுவது மிகவும் பலன் தரும்.
முடியின் வறட்சி தன்மையை மாற்ற இது நல்லது. மேலும், முடி உதிர்வதைத் தடுக்கவும் இது நல்லது. வைட்டமின் ஈ எண்ணெய் இறந்த முடிக்கு உயிர் மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகளில் ஒன்றாகும். வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை பல வழிகளில் பயன்படுத்தலாம். பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு இதனை உச்சந்தலையில் தடவுவது நன்மை பயக்கும். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனர் என்பதை மறக்காதீர்கள்.
இதையும் படிங்க: DIY Hair Mask: பட்டு போன்ற கூந்தல் வேண்டுமா?... சியா விதைகளை இப்படி பயன்படுத்துங்க!
இவை அனைத்தையும் முட்டையுடன் கலந்து உச்சந்தலையில் உட்பட உங்கள் தலைமுடியில் தடவவும். 1 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு கழுவலாம். தலைமுடிக்கு ஊட்டமளிக்க இது ஒரு நல்ல புரதச் சிகிச்சையாகும்.
Image Source: Freepik