Homemade Scrub: சருமம் சும்மா தகதகன்னு மின்ன… வீட்டிலேயே விதவிதமா ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

  • SHARE
  • FOLLOW
Homemade Scrub: சருமம் சும்மா தகதகன்னு மின்ன… வீட்டிலேயே விதவிதமா ஸ்க்ரப் தயாரிக்கலாம்!


பாடி ஸ்கரப் என்பது அழகை அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று. மார்க்கெட்டில் பல வகையான உடல் ஸ்க்ரப்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த பாடி ஸ்க்ரப்பை வீட்டில் உள்ள பொருட்களில் இருந்து தயாரிக்கலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். அதற்கு, வீட்டிலேயே பாடி ஸ்க்ரப் செய்ய எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காபி ஸ்க்ரப்:

காபி சருமத்திற்கு பளபளப்பையும், மென்மையையும் தரக்கூடியது. இதனை ஸ்க்ரப்பாக பயன்படுத்துவதால் உடலில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுகின்றன. சருமமும் நன்றாக பளபளக்கும். இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் என்பதால், அவற்றை தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

காபி தூள் - அரை கப்
சூடான தண்ணீர் - 2 தேக்கரண்டி
சூடான தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:

  • முதலில் கொதிக்கும் நீரில் காபி தூளைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அதில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட் பதம் வரும் வரை கலக்கினால் ஸ்க்ரப் ரெடி.
  • இந்த ஸ்க்ரப்பை நன்றாக காய்ந்த கன்டெய்னரில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.

பிரவுன் சுகர் ஸ்க்ரப்:

நமது வீட்டு சமையலறையிலேயே கிடைக்கக்கூடிய பிரவுன் சுகர் என அழைக்கப்படும் நாட்டுச் சர்க்கரை சருமத்திற்கு சிறந்த எக்ஸ்போலியேட்டராக செயல்படக்கூடியது.

குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இந்த ஸ்க்ரப் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளும் என்பதால், கட்டாயம் நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

தேவையான பொருட்கள்:

நாட்டுச் சர்க்கரை -½ கப் தேங்காய் எண்ணெய் - 2 துளிகள் (நீங்கள்
ஜோஜோபா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்)

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பிரவுன் சுகர் மற்றும் எண்ணெயைச் சேர்க்கவும்.
  • சர்க்கரை உருகும் வரை நன்கு கலக்கவும்
  • பின்னர் உங்களுக்கு பிடித்தமான எசன்ஷியல் ஆயிலை 2 துளிகள் சேர்க்கவும்.
  • இதனை ஒரு சுத்தமான கன்டெய்னரில் சேமித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.

சால்ட் ஸ்க்ரப்:

உப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எதிர்த்து போராடக்கூடியது. இருப்பினும், உங்களுக்கு தோல் பிரச்சினைகள் அல்லது வெட்டுக் காயங்கள் இருக்கும்போது இந்த உப்பு ஸ்க்ரப்பைப் பயன்படுத்த வேண்டாம்.

தேவையான பொருட்கள்:

உப்பு - அரை கப்
எசன்ஷியல் ஆயில் (விருப்பத்திற்கு ஏற்ப)

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யைக் கலந்து கொள்ளவும்.
  • இரண்டையும் நன்றாக கலக்கவும், நீங்கள் விரும்பிய நிலை வரும் வரை கலக்கினால் ஸ்க்ரப் தயார்.
  • இது வாசனை அற்றது என்பதால், நல்ல மணமுள்ள எசன்ஷியல் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

Read Next

கழுத்து சுற்றி உள்ள கருமையை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்