Homemade Face Wash: கெமிக்கல் ஃபேஸ் வாஷ்களுக்கு குட்பை; வீட்டிலேயே நேச்சுரல் ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம் வாங்க!

  • SHARE
  • FOLLOW
Homemade Face Wash: கெமிக்கல் ஃபேஸ் வாஷ்களுக்கு குட்பை; வீட்டிலேயே நேச்சுரல் ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம் வாங்க!

சரும வறட்சியை போக்க சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது, நிறைய தண்ணீர் பருகுவது போன்றவையே போதுமானது. இருப்பினும், சில நேரங்களில் பிசியாக இருப்பதால் அதைச் செய்ய முடியாமல் போகலாம். அதற்கு மாற்றாக தான் ஸ்கின் கேரை பின்பற்றுகிறோம்.

குறிப்பாக ஃபேஸ் வாஷ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ரசாயனம் கலந்த ஃபேஸ் வாஷ்களுக்கு பதிலாக இயற்கையான பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக்க மாற்றக்கூடிய ஃபேஸ் வாஷ்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க…

கடலை மாவு:

பல நூற்றாண்டுகளாக குளிப்பதற்கும், முகம் கழுவுவதற்கும் கடலை மாவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலை மாவை முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தை மிருதுவாகவும், ஆழமாகவும் சுத்தப்படுத்தும். டான், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்குவதோடு, எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.

கடலை மாவு ஃபேஸ் வாஷ் தயாரிக்க, கொண்டைக்கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து, ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதனை முகத்தில் தடவி சிறிது காய வைத்து பின் தண்ணீரில் கழுவவும். தினமும் இதைப் பயன்படுத்தி வந்தால், முகத்தின் பொலிவும் மென்மையும் எப்படி கூடுகிறது என பாருங்கள்…

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் நல்ல அளவு தண்ணீர் இருப்பதால், முகத்தில் வறட்சியை போக்க உதவுகிறது. வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி அல்லது தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். ஈரப்பதமும் பிரகாசமும் அப்படியே இருக்கும்.

காற்றாழை:

கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

ஃபேஸ் வாஷ் தயாரிக்க ஒரு கப் கற்றாழை ஜெல்லுடன், கொண்டைக்கடலை மாவு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த கலவையை முகத்தில் 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

துளசி:

துளசியின் பயன்பாடு சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் கூறுகள் பல வகையான தோல் தொடர்பான தொற்றுகளை நீக்க உதவுகிறது.

இதற்கு துளசி இலைகளை கழுவி அரைக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Glowing Skin: இந்த 3 பொருள் இருந்தால் போதும், பத்தே நிமிடத்தில் உங்க முகம் பளபளக்கும்!

Disclaimer

குறிச்சொற்கள்