பிசிஓஎஸ் பிரச்சனையால் குண்டாகிட்டீங்களா? - உடல் எடையை குறைக்க எளிய பயிற்சிகள்!

  • SHARE
  • FOLLOW
பிசிஓஎஸ் பிரச்சனையால் குண்டாகிட்டீங்களா? - உடல் எடையை குறைக்க எளிய பயிற்சிகள்!


1. நடைப்பயிற்சி:

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் உணவிற்கு பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், மன அழுத்த ஹார்மோன்களை சீர் செய்யவும் உதவுகிறது.

2. கார்டியோ:

ஜாக்கிங், ஸ்விம்மிங், மலையேற்றம், ரோயிங், சைக்கிளிங் போன்ற இதயத்துடிப்பை அதிகரிக்கக்கூடிய கார்டியோ உடற்பயிற்சிகள் கொழுப்பை கரைப்பது, மூளை செயல்பாட்டை அதிகரிப்பது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல், தூக்கம் மற்றும் மனநிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றை செய்கிறது. இது ஹார்மோன் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

3.ஸ்ட்ரென்த் டிரெயினிங்:

கார்டியோவை போலவே தசைகளின் வலிமையை அதிகரிக்கக்கூடிய ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளும் ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகின்றன.

4.யோகா:

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின் படி, PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாரத்திற்கு 3 நாட்களுக்கு யோகா செய்வது, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் DHEA அளவுகளை கட்டுப்படுத்தி, மாதவிடாய் சுழற்சி சீராக உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: பிசிஓஎஸ் இருக்கா.? உடனே இந்த பழக்கத்தை மாத்துங்க..

5. கோர் ஸ்ட்ரென்த்:

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் மிதமான பயிற்சிகளுக்குப் பதிலாக புஷ்-அப்கள் மற்றும் ட்ரைசெப் போன்ற தீவிரமான பயிற்சிகளை உடல் எடையை விரைவாக குறைக்கவும், இன்சுலின் அளவை அதிகரிக்கவும், ஹார்மோன்களை சீராக்கவும் உதவும்.

6. ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் ட்ரெயினிங்:

உயர்-தீவிர இடைவெளி பயிற்சி அல்லது HIIT என்பது அதிதீவிரமான பயிற்சிகளுக்கு நடுவே சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் தொடரும் பயிற்சியாகும். இந்த பயிற்சி கொழுப்பை கரைக்கவும், தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கவும் உதவுகிறது.

7. PCOS-யில் உடற்பயிற்சியின் விளைவுகள்:

PCOS பிரச்சனையை நிர்வகிக்கவும், வாழ்க்கை முறையை மாற்றவும் உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாகும். உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக PCOS உள்ள பெண்கள் உடற்பயிற்சி செய்வது எடையிழப்பையும் கடந்து பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Hormonal Imbalance: ஹார்மோன் சமநிலையின்மைக்கு இது தான் காரணம்..

Image Source: Freepik

Read Next

பிசிஓஎஸ் இருக்கா.? உடனே இந்த பழக்கத்தை மாத்துங்க..

Disclaimer

குறிச்சொற்கள்